ஆர்.என்.ரவிக்கு என்ன கோபம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 28, 2023

ஆர்.என்.ரவிக்கு என்ன கோபம்?

ராவணன் பேசிய மொழி சூத்திர பாஷையாம் - ஆளுநர் கால்டுவெலை கரித்துக் கொட்ட காரணம் சூத்திரபாஷையை போற்றிப் புகழ்ந்துவிட்டாரே என்ற கடுங் கோபம் தான். 

ஆம்! திராவிடம் என்ற ஒரு இனம் உண்டு அதற்கு தமிழ் முதன்மை மொழிதான். ஆகையால் தான் ஆரியக் கூட்டம் தமிழை தீண்டத்தகாத மொழி, சூத்திரன் பேசும் மொழி, சிவனின் கால்களில் இருந்து தோன்றிய மொழி என்று எழுதி வைத்துள்ளார்கள்.

வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டம் அத். 34இல் இலங்கை சென்று திரும்பிய ஹனுமன் அங்கு கண்டவற்றை விவரிக்கும் போது இராவணன் குறித்து இவ்வாறு கூறுகிறார்.

ராவணன் கல்வியில் சிறந்தவன் - காரணம் அவர் சூத்ரபாஷையில் பேசினாலும் தேவபாஷையில் சிறந்துவிளங்குகிறார் என்று கூறியதோடு தேவபாஷை - சூத்திரபாஷை குறித்து விளக்குகிறார். 

சிவனின் உடுக்கையின் ஓசையிலிருந்து வந்த மொழியை அவன் பேசினாலும் அவனோடு இருப்பவர்கள் சிவனின் ஆடலின் போது பாதத்திலிருந்து வந்த மொழியைப் பேசுகிறார்கள் என்பான். 

சிவ புராணத்தில் உள்ள ருத்ர சங்ஹிந்தாவில் பேச்சு மொழிகள் குறித்த ஸ்லோகம் உள்ளது, சிவனின் ஆட்டத்தின் போது (உடுக்கை) டமருவிலிருந்து தெறித்த ஓசை சம்ஸ்கிருதமாகவும் பாதம் பூமியில் பட்டு ஆடும் போது வெளிப்பட்ட ஓசைகள் அனைத்தும் பல்வேறு பாஷைகளாகவும் ஆகியது என்று உள்ளது. தலையிலிருந்து பிறந்தவன் புனிதன் - பாதத்தில் பிறந்தவன் சூத்திரன்.

உடுக்கையிலிருந்து பிறந்த மொழி தேவபாஷை, காலில் இருந்து ஒலித்த மொழி சூத்ர மொழி? இப்போது தெரிகிறதா. சங்கராச்சாரியார் ஏன் குளித்த பிறகு தமிழ் பேசமாட்டார் என்று!!

இவர்கள் சமஸ்கிருத்ததில் எழுதி வைத்திருந்ததை கால்டுவெல் உண்மையை உடைத்துக் காண்பித்துவிட்டாரே என்ற கோபத்தில் ஆளுநர் மூலம் பேசி இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment