பெரம்பலூரில் பெருமை சேர்த்த பகுத்தறிவு ஆசிரியரணியின் அறிவார்ந்த கருத்தரங்கம்..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 8, 2023

பெரம்பலூரில் பெருமை சேர்த்த பகுத்தறிவு ஆசிரியரணியின் அறிவார்ந்த கருத்தரங்கம்..!

பெரம்பலூர், அக்.8 பெரம்பலூர் மாவட்டதில் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில்  கருத்தரங்கம் 30.9.2023 அன்று மாலை 6 மணி அளவில்  நடந்தது. சிறப்பு வாய்ந்த கருத்தரங் கத்திற்கு பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட தலைவர் சீத்தாபதி தலைமை வகித்தார். பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட செயலாளர் நவநீத சோழன் அனைவரையும் வரவேற்று வரவேற்பு உரையாற்றினார். 

கருத்தரங்கத்தின் தொடக்கமாக பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட தலைவர் சீத்தாபதி தலைமை உரையாற்றுகையில்,

இந்திய கல்வி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த மகாத்மா ஜோதிபா பூலே பற்றியும் அவரின் மனைவி சாவித்திரிபா பூலே பெண் கல்விக்கு ஆற்றிய அரும்பணிகள் பற்றியும் அதற்காக அவர் பட்ட துன்பங்கள் பற்றியும் புரட்சியாளர்கள் அம்பேத்கர், பகத்சிங் பற்றியும் பல்வேறு தகவல்களை கூறி னார். திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு , திராவிடர் கழக மாவட்ட செயலாளர் விசயேந்திரன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் நடராஜன், ஆகியோர் முன்னிலை வகித்து கருத்தரங்கத்தின் சிறப்பை பற்றி உரையாற்றினர்.

தி.மு.கழகத்தின் பொதுக்குழு உறுப்பினரும், பகுத்தறி வாளர் கழக மேனாள் செயலாளருமான முகுந்தன் பேசும் பொழுது தான் பகுத்தறிவாளர் கழகத்தில் இருந்த பொழுதும் ஆசிரியராக பணியாற்றிய பொழுதும் ஆற்றிய இயக்க பணிகள் பற்றியும், மாணவர்களிடம் பெரியார் கருத்துகளை கொண்டு சேர்த்த அனுபவங்கள் பற்றியும் உருக்கமாக பகிர்ந்தார்.


மாநில பொறுப்பாளர்கள் உரை

பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் இரா.சிவக்குமார் தனது தொடக்க உரையில்,

ஆசிரியர் தலைமையில் நடைபெற உள்ள பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில கலந்துரையாடல் பற்றியும் அதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து ஆசிரியர்கள் பெரு மளவில் கலந்து கொள்வதற்கான ஆயத்த பணிகளை இன்றி லிருந்து பகுத்தறிவு ஆசிரியர் அணி தோழர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பகுத்தறிவு எண்ணம் கொண்டுள்ள ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களை உறுப் பினர்களாக சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். கல்வித்துறையில் காவி சாயம் பூச முயற்சிக்கும் ஒன்றிய அரசின் ஹிந்துத்துவா எண்ணத்தையும் அதற்கு துணை போகும் கல்வியாளர்களையும் பகுத்தறிவு ஆசிரியர் களாகிய நாம் அடையாளம் காண வேண்டும் என்றார்.

அவரைத் தொடர்ந்து நோக்க உரையாற்றிய பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநிலத் தலைவர் ஆசிரியர் தமிழ் பிரபாக ரன் பகுத்தறிவு ஆசிரியர் அணியின் தோற்றம் பற்றியும் அதன் முந்தைய பொறுப்பாளர்கள், அவர்களின் செயல்பாடு கள் பற்றியும் தற்போதைய பகுத்தறிவு ஆசிரியர் அணியின் தேவை என்ன என்பதை பற்றியும் நீண்டதொரு விளக்கத் தினை கூறினார். இன்றைய கல்வித்துறை உள்ள சூழலில் பகுத்தறிவு ஆசிரியர் அணியின் செயல்பாடுகள் எவ்வளவு முக்கியமானது என்றும் அதனை சிறப்பாக செய்திட பகுத் தறிவு ஆசிரியர் அணியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் ஆர்வமுடன் செயல்பட வேண்டும் என்றார். மேலும் பகுத்தறிவு ஆசிரியர் அணியை தற்போது வழிநடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அன்றாட பணிகள் பற்றியும் கல்வித்துறை பற்றி இன்றைக்கும் அவர் சிந்தித்து விஸ்வகர்மா போஜான என்ற நவீன குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து அவரின் பிரச்சார பயணம் பற்றியும் விளக்கினார். 

ஆத்தூர் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் முரு கானந்தம் இணைப்புரை ஆற்றும் பொழுது, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்லிய ஸநாதனம் ஒழிப்போம் என்ற ஒற்றை வார்த்தை எவ்வளவு பெரிய விவா தத்தை தொடங்கி வைத்துள்ளது என்றும் ஸநாதனத்தை ஒழிப்பது தான் நமது முதன்மை பணியாக இருக்க வேண்டும் என்றார்.

என்னை திராவிடர் கழகக்காரனாக மாற்றியதே பிஜேபிகாரர் ஆன எனது தந்தை தான்..!

புதிதாக இயக்கத்தில் சேர்ந்த தோழர் லகாந்தி பேசுகையில் தான் பெரியார் கொள்கைகளை படித்து பின் திராவிடர் கழகத்தில் பயணிக்க முக்கிய காரணம் தனது அப்பா என்றும் அவர் பிஜேபி கட்சியை சார்ந்தவர் என்றும் தினமும் பெரியாரையும் அவரின் கொள்கைகளையும் விமர்சனம் செய்து கொண்டே இருப்பார் என்றும் கூறினார். தினமும் பெரியாரை விமர்சிக்கிறாரே அப்படி என்னதான் பெரியார் சொன்னார் என்று பெரியார் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். நடுநிலைமையோடு சிந்திக்க ஆரம்பித்தேன். அதன் விளைவு இன்று கருப்பு சட்டை அணிந்து உங்கள் முன்னால் பேசிக் கொண்டு இருக்கின்றேன் என்றதும் அனைவரின் மனதிலும் மட்டற்ற மகிழ்ச்சி..! பெரியாரின் வெற்றியாக தான் கருதுவது தமிழ்நாட்டில் பெயருக்கு பின் ஜாதி பெயரை சேர்ப்பதை அருவருக்கத்தக்க செயலாக மாற்றி உள்ளது தான் என்றார்.

மேலும் 15 - 16 வயதுதான் சிந்திக்கும் வயது அந்த வயதில் உள்ள குழந்தைகளை நல்வழிப்படுத்துவது மிகவும் எளிது ஆகையால் மாணவர்களை பகுத்தறிவுவாதிகளாக மாற்றுவதற்கு ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது என்றார்.

பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன்

‘‘தந்தை பெரியாரும் - தமிழ்நாட்டு கல்வியும்'' என்ற தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் சிறப்பானதொரு உரையாற்றினார்.

ஆங்கிலேயரும் அதன் பின் வந்த நீதிக்கட்சியும் தான் தமிழருக்கான கல்வியை வழங்கியது..!

மன்னர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி என்று இருந்த நிலையில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் கல்வியை அனைவருக்கும் சமமாக தந்தார்கள் என்றும் அதனைத் தொடர்ந்து நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ்நாடு கல்வியில் வளர்ச்சி பெற்றது என்பதையும் ஆதாரங்களுடன் விளக்கி கூறினார். முதன் முதலில் சென்னை மாகாணத்தில் சர்.பி.டி. தியாகராயர் தான் மாணவர்களுக்கு உண்ண உணவும், தங்கி கல்வி கற்பதற்கு விடுதியும் இலவசமாக தந்து கல்வியை வளர்த்தார். அந்த நீதி கட்சியின் நீட்சியாக விளங்கும் இன்றைய திராவிட மாடல் ஆட்சியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு காலை உணவையும் இலவசமாக வழங்கி வரலாற்றில் இடம் பெற்றுள்ளார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார். அறிவு அற்றம் காக்கும் கருவி என்ற வள்ளுவரின் கூற்றை சாத்தியமாக்க வேண்டும் என்றால் கல்வி என்பது முக்கியமானது ஒன்றாகவும் அது அனைவருக்கும் வழங்கிட வேண்டும் என்றும் கூறினார்.

பார்ப்பனர்கள் என்றும் தமிழர்களின் கல்விக்கு எதிரி..!

பார்ப்பனர்கள் என்றும் தமிழர்களின் கல்விக்கு எதிரியாக தான் இருந்து வந்துள்ளனர் என்பதை வரலாற்றில் பல தகவல்கள் மூலம் விளக்கினார். 1938 இல் ஆட்சிக்கு வந்த ராஜாஜி ஹிந்தியை திணித்தார். அதன் பின் 1952 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ராஜாஜி நிதி நிலைமையை காரணம் காட்டி 3000 அரசு பள்ளிகளை மூடினார். அதன் மறு உருவமாக வந்துள்ள இன்றைய பிஜேபி அரசானது நவீன குலக்கல்வி திட்டத்தை அறிமுகம் செய்து மீண்டும் தமிழர்களின் கல்வியை வஞ்சிகின்றது என்றார்.

காமராசர், நெ.து.சுந்தரவடிவேலு ஆற்றிய கல்வி பணி..!

குலக்கல்வித் திட்டத்தின் மூலம் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய ராஜாஜி அவர்களுக்குப் பின்னர் ஆட்சியில் அமர்ந்த பச்சைத்தமிழர் காமராஜர் பல்வேறு கல்வி வளர்ச்சிகளை தமிழ்நாட்டில் நிகழ்த்தினார். நிதி நிலையை ஆதாரம் காட்டி ராஜாஜி மூடிய 3000 பள்ளிகளை காமராஜர் மீண்டும் திறந்தார். மேலும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க இலவச மதிய உணவுத் திட்டத்திற்காக இந்தியா முழுவதும் மடிப்பிச்சை ஏந்தி நிதி சேகரித்தார் என்ற செய்தியை கூறி விளக்கினார். மேலும் காமராசரின் பல்வேறு கல்வி வளர்ச்சி திட்டதிற்கு உறுதுணையாக இருந்த அன்றைய கல்வி இயக்குநர் பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட நெ. து. சுந்தரவடிவேலு அவர்களின் பணியினை விவரித்து கூறினார். 

கேரளா மாநிலம் வைக்கத்தில் மாதவன் நாயர் என்ற வழக்குரைஞக்கு தெருவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் தெருவில் நடக்க அனுமதி இல்லை என்றதையும் எதிர்த்து தந்தை பெரியார் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போராடத்தில் தந்தை பெரியாருக்கு கடினமான தண்டனை வழங்கப்பட்டு கையிலும் காலிலும் விலங்கு போட்டு கல்லுடைக்கும் பணியும் வழங்கப்பட்டது. அந்த கடினமான சூழ்நிலையில் கூட தந்தை பெரியார் சராசரி கைதிகள் உடைத்ததை காட்டிலும் அதிகப்படியாக கற்களை உடைத்தார் என்றும் அந்த தியாகம் தான் ஒடுக்கப்பட்ட மக்களை தெருவுக்குள் நுழைய அனுமதி வாங்கித் தந்தது என்றார்.

கருத்தரங்கின் முடிவில் பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் ஆசிரியர் ரவி நன்றியுரை ஆற்றினார்.

கருத்தரங்கில் திராவிடர் கழக தோழர் துரைசாமி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் தமிழரசன், இளைஞரணி செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிதாக கருத்தரங்கில் பங்கேற்ற பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மகேந்திரன், வடிவேல், சின்னசாமி,  கல்லூரி பேராசிரியர் விஜயபாஸ்கர், பொன்மலர், மதியழகன் ஆகியோரைப் பாராட்டி பெரியார் புத்தகங்கள் வழங்கி சிறப்பிக்கபட்டது.

No comments:

Post a Comment