மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிமீது அபாண்டமாக குற்றம் சுமத்துவதா? ஆளுநர் மாளிகையின் புகாருக்கு கட்சித் தலைவர்கள் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 27, 2023

மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிமீது அபாண்டமாக குற்றம் சுமத்துவதா? ஆளுநர் மாளிகையின் புகாருக்கு கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை,அக்.27  ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை ஆணையரிடம் அளிக்கப்பட்டி ருக்கும் புகாரில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மீதான ஆதாரமற்ற குற்றச் சாட்டை கண்டித்து  கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: 

வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ : சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் மீது, நேற்று முன்தினம் 25.10.2023 அன்று   பிற்பகல் 2.45 மணியளவில், முதன்மை நுழைவாயிலில் பெட் ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பு விஷமத்தனமான அர சியல் உள்நோக்கம் கொண்டது ஆகும்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் போல ஆளுநர் ஆர். என். ரவி செயல்படுவதும், இந்துத்துவக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்பதும், ராஜ்பவனில் போட்டி அரசு நடத்து வதைப் போல இயங்குவதும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

அரசியல் சாசனத்தின் அடிப் படையில் செயல்பட வேண்டிய ஆளுநர், மரபுகளை மீறுவதால் அரசியல் கட்சிகள் கண்டனம் செய்கின்றன.

அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கிற வரம்புக்குள் நின்று ஆளுநர் செயல்பட்டால் விமர்சனங்கள் எழாது.

ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளுக்குக் கருத்துரிமை இருக்கிறது என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய சட்ட முன் வரைவு களுக்கு அனுமதி தராமல், தானடித்த மூப்பாக ஆளுநர் செயல்படுவது கண்டனத்துக் குரியது தான்.

ஆனால் இதையெல்லாம் திசை திருப்புகிற வகையில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி களின் மீது ஆளுநர் பழி போட்டு இருப்பது, ஆளுநர் மாளிகை பாஜகவின் அரசியல் கூடாரமாக மாறி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டு கிறது.

தமிழ்நாட்டில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி, அரசி யல் ஆதாயம் தேட நினைக்கும் சக்திகள் சூத்திரதாரியாக இருந்து ஆளுநரைப் பயன்படுத்துகின்ற னர் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள்.

இத்தகைய முயற்சிகள் முறியடிக்கப்படும் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலசெயலாளர் இரா.முத்தரசன்: ஆளுநர்மாளிகை நுழைவாயில் அருகே, பெட் ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை அதிகாரி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அந்தபுகாரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணி கட்சிகள் மீது அடிப் படை யற்ற குற்றச்சாட்டை திணித்துள் ளார்.அதில் திமுக மற்றும் அதன் கூட்டணிகட்சிகளின் தலை வர்கள் மற்றும் தொண்டர்களால் அச்சுறுத்தப்படுவதாக புனையப் பட்டுள்ளது. இதனைஏற்க முடி யாது. ஆர்.என்.ரவி ஆளுநர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாளில்இருந்து அதிகார அத்து மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதனால் கடுமை யான விமர்சனங்களுக்கு ஆளா கியும் வருகிறார். அவரது அதிகார அத்துமீறலை விமர் சனம் செய்யும் உரிமையை பறிக்கும் வஞ்சகஎண்ணத்துடன் தற்போது மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சிகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வன்மையாக மறுக் கிறோம். 

கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்கடும் கண்டனத்துக்குரியது. இதற்கு காரணமான குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இச் சம்பவம் குறித்து ஆளுநர் மாளிகை அதிகாரி சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மீது அடிப் படை ஆதாரமற்ற குற்றச் சாட்டை முன்வைத்திருக்கிறார்.

இது முழுக்க, முழுக்க புனையப்பட்டுள்ள கட்டுக்கதை. ஆளுநர் ஆர்.என். ரவி தொடக் கத்தில் இருந்தே மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஜனநாயக ரீதியில் செயல்பட விடாமல்தடுத்து வருவதால் கடும் விமர்சனங் களுக்கு உள்ளாகி வருகிறார். இந்த புகாரின் மூலம் அரசியல் ஆதாயம் தேடவும், கருத்துரி மையை பறிக்கவும் மட்டுமே முயற்சிக்கிறார். இந்த புகார் அடிப்படை ஆதாரமற்றது. உட னடியாகபுகாரை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment