இறப்பின் விளிம்பில் இருந்து மீண்ட பள்ளி மாணவி திருநெல்வேலி அரசு மருத்துவமனையின் சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 20, 2023

இறப்பின் விளிம்பில் இருந்து மீண்ட பள்ளி மாணவி திருநெல்வேலி அரசு மருத்துவமனையின் சாதனை

திருநெல்வேலி, அக்.20 மாரடைப்பு ஏற்பட்ட 17 வயது மாணவிக்கு நவீன சிகிச்சை அளித்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மருத்துவர்கள் காப் பாற்றி உள்ளனர். இது தொடர் பாக கல்லூரி முதல்வர் மருத் துவர் ரேவதிபாலன் கூறியதாவது: 

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அரசுப் பள்ளி யில் நடைபெற்ற இலவச மருத் துவமுகாமில், அங்கு பயிலும் பிளஸ்-2 மாணவிக்கு அதிக ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்றுவந்தார். திடீரென்று அவருக்கு தலை வலி, நெஞ்சுவலி மற்றும் பார்வை இழப்பு ஏற்பட்டது. 

100 சதவீதம் அடைப்பு 

இதையடுத்து, கடந்த 7ஆ-ம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அந்த மாணவிக்குஇதய ரத்தக் குழாயில் 100 சதவீதம் அடைப்பு இருப்பதை, இதயவியல் துறைத் தலைவர் ரவிச்சந்திரன் எட் வின் தலைமையிலான மருத் துவக் குழுவினர் கண்டறிந் தனர். தொடர்ந்து, பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட் என்ற நவீன சிகிச்சை அளிக்கப்பட்டு, அந்த மாணவி காப்பாற்றப் பட்டார். தற்போது அவரது ரத்த அழுத்தமும் சீராக உள் ளது. மாணவி இயல்பு நிலைக் குத் திரும்பியுள்ளார். 

பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட்:  பொதுவாக மார டைப்பு ஏற்பட்டால் பாதிக்கப் பட்ட நபருக்கு கிராம்போ லைசிஸ் என்ற மருந்து கொடுக் கப்பட்டு, அதன் பின்னர் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படும், ஆனால் இந்த மாணவிக்கு ரத்த அழுத்தம் அதிமாக இருந்ததால், இந்தியாவிலேயே முதல்முறையாக கிராம்போ லைசிஸ் மருந்து கொடுக்காமல், பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வர்கள் சாதனை நிகழ்த்தி உள் ளனர். இவ்வாறு மருத்துவர் ரேவதிபாலன் தெரிவித்தார்.


No comments:

Post a Comment