பாலஸ்தீனர்களுக்கு உணவு, தண்ணீர், மருந்துகளை இஸ்ரேல் தடுக்கக்கூடாது: ஒபாமா அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 27, 2023

பாலஸ்தீனர்களுக்கு உணவு, தண்ணீர், மருந்துகளை இஸ்ரேல் தடுக்கக்கூடாது: ஒபாமா அறிக்கை

வாசிங்டன், அக். 27 - ஹமாஸ் குழுவினருக்கு எதிரான   போரைக் காரணமாக்கி, பாலஸ்தீன  மக்களுக்கு உணவு, தண்ணீர், மருந்துப் பொருட்களை செல்ல விடாமல் தடுப்பது, இஸ்ரேலுக்கான பன்னாட்டு ஆதரவை குறைக்கும் எனவும், இதனால்  எதிர்காலத்தில்  பாலஸ்தீன மக்களின் போக்கு மேலும் தீவிரமாகும் எனவும்   அமெரிக்க மேனாள் அதிபர் பராக் ஒபாமா அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். 

போரை துவங்கியதிலிருந்து லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் காசாவை விட்டு வெளி யேறாத வகையில் சுற்றி வளைத்து இஸ்ரேல் குண்டுவீசி வருகிறது. மேலும் பாலஸ் தீனர் களுக்கு  உணவு, தண்ணீர், மின் சாரம் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கிடைத்து விடாமல் இஸ்ரேல்  அரசு  தடுத்து வருகிறது. ‘போரில் அப்பாவி மக்கள் மீதான எந்த ஒருவகையான  தாக்குதலையும் அனுமதிக்க முடியாது. இது மிக  பெரிய போர்க்குற்றம்’ என இஸ்ரேலின் செயலுக்கு பன் னாட்டு அளவில்  கண்டனம் எழுந்துள்ளது. 

மேலும்  காசாவிற்குள் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல இஸ்ரேல் அரசு  அனுமதி வழங்க வேண்டும் என பல நாட்டு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் பல நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் இஸ்ரேல் ராணுவத்தின் இந்த போர்க்குற்றத்தை கண்டித்து பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  

இந்நிலையில் அமெரிக்கா மேனாள் அதிபர் ஒபாமாவின் அறிக்கையில், ஹமாஸ் அமைப் புக்கு தனது கண்டனத்தையும், இஸ்ரேலின் போர் நட வடிக்கைக்கு ஆதரவையும் தெரிவித்திருக்கும் அதே நேரத்தில், “இஸ்ரேலின் இந்த நடவடிக்கை இஸ்ரேலுக்கான உலகளாவிய ஆதரவை குறைக்கும் என்றும்   இந்த போரில் பாலஸ்தீன மக்க ளின் நலன்களை புறக்கணிக்கும்  இஸ்ரேல்  இராணுவத்தின் எந்த வொரு நடவடிக்கையும் நிலைமையை இஸ்ரேலுக்கு எதிரானதாக மாற்றும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment