கொள்கைக் குடும்பத்தில் ஒரு தூண் சாய்ந்தது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 4, 2023

கொள்கைக் குடும்பத்தில் ஒரு தூண் சாய்ந்தது!

மறைந்த பெரியாரின் பெருந்தொண் டர் வனத் தையன் அவர்களின் இணை யரும், இலால்குடி கழக மாவட்டம் இளை ஞரணி அமைப்பாளர் ஆ.வான்முடிவள் ளலின் தாயாருமான வ.அந்தோனியம்மாள் (வயது 81) நேற்று (3.10.2023) இயற்கை எய்தினார்.

தமிழர்தலைவரின் ஆணையேற்று குடும் பமே சிறை சென்றுள்ள தியாக வரலாறு அந்தக் குடும்பத்திற்கு உண்டு.

தமிழக-இந்திய-உலக அரங்கில் பல்வேறு போராட்ட வரலாற்றில் எந்த இயக்கத்திலாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவருமே ஒரே நேரத் தில் சிறைக் கோட்டமேகி தியாக வரலாறு படைத்த நிகழ்ச்சி நடந்ததா என் பது தெரியவில்லை. இதோ நமது திராவிடர் கழகத்தில் அந்த உலக சாதனை நிகழ்ந்து விட் டது

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள் ளம்பாடி ஒன்றியத்தைச் சேர்ந்த விடுதலை புரம் கிராமம் கழகத்தின் வர லாற்றில் இரண்டற கலந் துள்ள சிற்றூர் திராவிடர் கழக கொள்கைக்காகவே   தன் வாழ்வை அர்ப்ப ணித்து மறைந்த பெரியார் பெருந்தொண்டர் மூ. தங்கவேலனார் அவர்க ளின் அயராத முயற்சியா லும் உழைப்பாலும் உரு வாக்கப்பட்டு தந்தை பெரியாரால் அறிமுகப் படுத்தப்பட்ட சின்னஞ்சிறிய எழில் கொஞ்சும் ஊர்.

கழகத் தலைவர் ஆசிரி யர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியாரின் உருவச் சிலை காட்சி தரும் கிரா மம் இந்த கிராமத்தைச் சேர்ந்த வனத்தையன் அவர்களின் குடும்பம். வனத்தையன், அந்தோனி யம்மாள் (மனைவி), ஆரோக்கியசாமி (மகன்), தெய்வநாதன் (மகன்), ஜென்ம ராகினி (மகள்).

தமிழர் தலைவரின் ஆணையை மகிழ்ச்சியு டன் ஏற்று உச்ச நீதி மன்ற நீதிபதிகளின் கொடும் பாவி எரித்த இந்த அனைவருமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள னர்.  தந்தை பெரியாரின் கொள்கை தங்கங்களாக வீட்டைத் துறந்து குடும் பத்தோடு சிறையேகி விட்டனர். இந்த தியாகச் செம்மல்கள்.  ஆண்கள் மூவரும் திருச்சி சிறையில்!  பெண்கள் இருவரும் மதுரை சிறையில்! இருந் தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment