மும்பையில் நடைபெற்ற முப்பெரும் விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 25, 2023

மும்பையில் நடைபெற்ற முப்பெரும் விழா!

குடும்பம், குடும்பமாகத் திரண்ட தமிழர்கள்! 'தாய் வீட்டில் கலைஞர்' நூல் அறிமுகம்‌!

இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு அடுத்து பெரி யாரியல் கொள்கைகளைத் தொடர்ச்சியாகச் செயல்படுத்தக் கூடியது மராத்திய மாநிலம்!

மராத்திய மண்ணில் திராவிடர் கழகம்!

தமிழ்நாட்டில் 1944 ஆம் ஆண்டு திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்து இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தினார் பெரியார்! நான்கே ஆண்டுகளில் மராத்திய மாநிலம் மும்பையில் 1948 இல் திராவிடர் கழகம் உருவாக்கப்பட்டுவிட்டது! அவ்வளவு சிறப்பு வாய்ந்தது மராத்திய மாநிலமும்; மராத்திய வாழ் தமிழர்களும்!

மராத்திய மாநிலத்தின் வேர்களாக, விழுது களாக விளங்கியவர்கள் மானமிகுவாளர்கள் பொ.தொல்காப்பியன், எம்.மோசஸ், ஜோசப் ஜார்ஜ், பெ.மந்திரமூர்த்தி, திராவிடன், த.மு.ஆர்ய சங்கரன், ஆர்.ஏ.சுப்பையா,‌ சி.என். கிருஷ்ணன், எஸ்.எஸ். அன்பழகன், என்.ஏ. சோமசுந்தரம், வி.நடேசன், ஞா.இராவணன், எஸ்.இராசு, எஸ்.பெருமாள், ஏ.பி. நெல்லையா (விடுதலை முகவர்), சு.நெல்லையப்பா, மாரா.சு. இசக்கி, சி.வேலாயுதம்,  ம.தயாளன், பி.இரத்தினசாமி போன்றோர்!

மும்பை மாநகரில் முப்பெரும் விழா!

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு, மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் நூற்றாண்டு, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா ஆகியவை இணைந்து முப்பெரும் விழாவாக 21.10.2023 அன்று, மும்பை மாதுங்கா பகுதியில் உள்ள மைசூர் அசோசியேசன் அரங்கத்தில் நடைபெற்றது. மும்பை திராவிடர் கழகம், மும்பை பகுத்தறி வாளர் கழகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், மராத்திய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தோழர்கள் திரண்டு வந்திருந்தனர்! நிகழ்ச்சியில் மும்பை திராவிடர் கழகச் செயலாளர் இ.அந்தோணி வரவேற்புரை ஆற்றினார். மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் தலைமையேற்க, மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன் தொடக்கவுரை ஆற்றினார்.

தமிழ் இலெமூரியா அறக்கட்டளை உறுப்பினர் கு.நங்கை, திமுக மராத்திய மாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், இதயம் அறக் கட்டளைத் தலைவர் அ.மகேந்திரன், தொழிலதிபர் ஆ.டென்சிங், மும்பை‌ பகுத்தறிவாளர் கழகப் பொருளாளர் ஆர்.பரமசிவன், திராவிடர் இயக்க உணர்வாளர் க.வளர்மதி, மும்பை விழுத்தெழு இயக்கம் இரா.தங்கபாண்டியன், மும்பை திராவிடர் கழகம் இ.வாசுகி, மும்பை மாநகர திமுக என்.வி.சண்முகராசன், மும்பை திராவிடர் கழகம் அய்.செல்வராஜ், ஜெரிமேரி தமிழ்ச் சங்கத் தலைவர் கோ.சீனிவாசகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தாராவி ஞான.அய்யாப்பிள்ளை ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

தாய் வீட்டில் கலைஞர் நூல் அறிமுகம்!

தந்தை பெரியார் படத்தை ஆ.பாலசுப்பிர மணியன், அன்னை மணியம்மையார் படத்தை சிவ.நல்லசேகரன், பேரறிஞர் அண்ணா படத்தை எஸ்.பி.செழியன், டாக்டர் கலைஞர் படத்தை ஜேம்ஸ் தேவதாசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய "தாய் வீட்டில் கலைஞர்" நூல் அறிமுகம்‌ செய்து வைக்கப்பட்டது. நூலினைத் தமிழ் இலெமூரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன் வழங்க, மும்பை புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான், திமுக இளைஞரணி அமைப்பாளர் 

ந.வசந்தகுமார், திமுக அவைத் தலைவர் ஜேம்ஸ் தேவதாஸ் ஆகிய மூவரும் பெற்றுக் கொண்டனர்!

தொடர்ந்து தமிழ் இலெமூரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன், மும்பை புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான், கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் நெல்லை பைந்தமிழ், மும்பை இலக்கியக் கூடம் அமைப்பாளர் வ.இரா.தமிழ்நேசன், திராவிடர் கழக மும்பை மாநிலத் துணைச் செயலாளர் ஜெ.வில்சன், திராவிடர் கழகத் தோழர் பெரியார் பாலாஜி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

திராவிடர் இயக்கங்களின் சாதனைகள்!

தொடர்ந்து வைக்கம் போராட்டம் முதல் இன்றைய வரையிலான இயக்கச் செயல்பாடுகள் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் குறித்துத் திராவிடர் கழக  ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், டாக்டர் கலைஞர் தொடங்கி இன்றைய வரையிலான திமுக ஆட்சியின் சிறப்புத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிடர் கழகம் மற்றும் பெரியாருக்கு எதிரான அவதூறுகள் குறித்துத் திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் ஆகியோர் உரையாற்றினர். 

நிறைவாக மும்பை திராவிடர் கழகப் பொருளாளர் அ.கண்ணன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் க.வ.அசோக்குமார், இறை.ச.இராஜேந்திரன், தொல்.காமராஜ், பு.தேவராசன், காரை கரு.இரவீந்திரன்,  சி.பிரசாத், இளங்கோ அப்பாத்துரை, சங்கர் திராவிட், தனுஷ்கோடி, ஜெயினுலாதீன், சேகர் சுப்பையா, பி.கே.இராஜேந்திரன்,  அ.குணசேகரன், முனைவர் ஸ்டீபன் இரவிக்குமார், சாலமன் ராஜா, பி.கிருஷ்ணன், சாத்தரசன்பட்டி ம.சேகராசு, மு.கணேசன், இ.உதயக்குமார், ப.மிக்கேல் அந் தோணி, பத்லாபூர் டே.மோகன், இரவி ரஜினி,  முத்தமிழ் தண்டபாணி, வீரை.சோ. பாபு, ச.சி.தாசன், பொய்சர் மூர்த்தி, மு.மாணிக்கம், சென்னை கு.தங்கமணி, த.தனலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மும்பையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை!

இதனை தொடர்ந்து பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 22.10.2023 அன்று தாராவி அம்பேத்கர் பள்ளியில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் மும்பை திராவிடர் கழகச் செயலாளர் இ.அந்தோணி வரவேற்புரை ஆற்றினார். மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன் தலைமை யேற்றார். திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் தொடக்கவுரை ஆற்றினார். செ.செல்வி, ம.சுமதி, சு.வெண்ணிலா, இ.வனிதா, க.வளர்மதி, ஜென்ஸி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அம்மா என்பவர் சும்மா இல்லை!

தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந் தனைகள் எனும் தலைப்பில் மும்பை எழுத்தாளர் புதிய மாதவி வகுப்பு எடுத்தார். 

யார் வீட்டில் எல்லாம் அம்மா வேலை செய் கிறார்கள் எனக் கேட்ட போது, பகுதி பேர் கை உயர்த்தினார்கள். கை உயர்த்தாத மிகுதி மாணவர்களிடம் உங்கள் அம்மா வேலை செய்ய வில்லையா? என்ற போது, "ஆமாம்! வீட்டில் சும்மா தான் இருக்கிறார்கள் எனக் கூறினார்கள். அதிகாலை எழுந்து நள்ளிரவு தூங்கச் செல்லும் அம்மாக்கள் வீட்டில் சும்மாதான் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு கொடுமையானது என்பதை விளக்கினார்.  பாலியல் சமத்துவத்தை வலியுறுத் தியவர் பெரியார். அதற்காகக் கடுமையாகப் போராடினார். அதன் பொருட்டு நமக்கு சமத்துவம் கிடைத் துள்ளது. இப்போது அடுத்த கட்டத்திற்கு நாம் போராடுகிறோம்.  பெண் பிள்ளைகள் பள்ளியில் முதல், இரண்டு, மூன்று மதிப்பெண்கள் வாங்குவது மட்டுமல்ல; அய்.அய்.டி, அய்.அய்.எம், அய்.பி.எஸ், அய்.ஏ.எஸ், மருத்துவர் என முன் னேறி செல்ல வேண்டும். நம் வீட்டில் அண்ணன், தம்பிகளுக்கு எதுவெல்லாம் இருக்கிறதோ, அதுவெல்லாம் நம் அக்கா, தங்கைகளுக்கும் வேண்டும் என்பதே பெண்ணுரிமை! 

ஊதியம் இல்லா உழைப்பு!

பண்ணையார் சமூகத்தில் பெண்களுக்கு நிறைய உரிமைப் பாதிப்புகள் இருந்தன. தொழிற் புரட்சி ஏற்பட்ட பிறகு மகளிருக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்தன! வருமானமும், உரிமை களும் கூடவே பெருகின. அதற்கு முன்பும் பெண்களுக்கு வேலைகள் இருந்தன. ஆனால் அந்த வேலைகளுக்கு வருமானம் கிடையாது! குறிப்பிட்ட நேரம் என்பதும் கிடையாது.

சிலர் மிதவாதப் பெண்ணியம் பேசினார்கள். சமூகம் கொஞ்சம் மாறினால் போதும் என்று நினைத்தார்கள். "எங்களுக்கு ஏதாவது கொடுங்க", என்கிற நிலையிலே இருந்தார்கள்.

சமூக விடுதலை தந்த பெரியார்!

எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் பெரியாரின் பெண்ணுரிமை! ஆனால் ஆண் களுக்கு உயர்வு, பெண்களுக்குத் தாழ்ச்சி என்கிற நிலை நீடிக்கிறது. கட்டட வேலையில் கொத்தனார் ரூ.800-ம், சித்தாள் ரூ.400-ம் சம்பளம் பெறு கிறார்கள். ஒரே துறையில் வேலை, ஒரே உழைப்பு, ஒரே உடல் வலிமை! ஆனால் ஊதியம் மட்டும் பாதி என்பது எவ்வளவு அக்கிரமம்?

இங்கே அரசியல் விடுதலை, சமூக விடுதலை இரண்டிற்காகவும் பல தலைவர்கள் பாடுபட் டார்கள். இதில் பெரியாரின் சமூக விடுதலையே பெரும் மாற்றத்தை, புரட்சியைச் சமூகத்தில் வித் திட்டது என எழுத்தாளர் புதிய மாதவி பேசினார்.

மதமற்றவர்களுக்குத்  தனித்துவம்!

தந்தை பெரியார் பார்வையில் மதங்கள் எனும் தலைப்பில் "டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சமூக அறிவியல்" கூடத்தின் ஆராய்ச்சி மாணவி கயல்விழி பேசும்போது, மதங்கள் எதுவும் தேவையில்லை என்பது நாத்திகம், ஏதாவது ஒரு மதத்தை மட்டும் பின்பற்றுவது ஆத்திகம். பெரியார் தன்னை நாத்திகராக அறிமுகம் செய்து கொண்டவர். 

இங்கே உங்களை இஸ்லாமியர், கிறிஸ்தவர், இந்து என உங்கள் அறிமுகம் செய்து கொள்வீர்கள். இது நம் பிறப்பையொட்டியே வருவது, பெற்றோர் வழியிலும் தொடர்வது. அதேநேரம் குறிப்பிட்ட வயதை அடைந்ததும், நமக்கான மதத்தைத் தேர்வு செய்து கொள்ளும் உரிமையை இந்திய அரசியல் சட்டம் நமக்கு வழங்கியிருக்கிறது.  எந்த மதத் தையும் பின்பற்றாதவர்களை "மத மற்றவர்கள்" என்று குறிப்பிடும் நிலை இன்னும் வரவில்லை.

கடவுளைக் காப்பாற்றுவது நம் வேலையல்ல! 

கடவுள் உங்களுக்கு எதுவுமே செய்வதில்லை. மாறாகக் கடவுளைத் தான் நீங்கள் காப்பாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அவருக்கு சக்தி இருந்தால், அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மாட்டாரா? பாஜக என்ன சொல்கிறது? வாருங்கள் நம் கடவுளை நாம் காப்பாற்றுவோம் என்கிறது. அவ்வளவு பலகீனமாகத் தான் இந்தக் கடவுள்கள் இருக்கின்றன. இனி கடவுளைக் காப்பாற்ற யாராவது அழைத்தால் போகாதீர்கள்.

ஜாதி மறுத்தோருக்கு இட ஒதுக்கீடு!

ஜாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும். சட்டப்படியான அங்கீகாரம் மிக முக்கியம். ஜாதி மறுக்கும் நாம் கூட்டாகச் செயல்பட வேண்டும். குடும்பம் குடும்பமாகப் பழக வேண்டும். அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து ஜாதி, மதங்களை அப்புறப்படுத்த வேண்டும்", என ஆராய்ச்சி மாணவி கயல்விழி பேசினார். பெரியாரும் ஜாதி ஒழிப்பும் எனும் தலைப்பில் பேசிய தமிழ் இலெமூரியா அறக் கட்டளை நிறுவனர் சு.குமணராசன் பேசும் போது, முதலில் பயத்தைக் கொல்லுங்கள், நினைத்ததை நீங்கள் செய்ய முடியும் என்றார். 

பெருமையும்! இழிவும்!

இங்கே மாணவர்கள் இருக்கிறார்கள். ஒருவர் ஆசிரியர், மற்றவர் மருத்துவர், அய்.பி.எஸ், விஞ்ஞானி எனப் பல இலட்சியங்களோடு அமர்ந் திருக்கிறார்கள். நாம் அனைவரும் திராவிடர்கள். நமக்குள் வேறுபாடுகள் கிடையாது; மேல் கீழ் இல்லை. ஆனால் ஜாதிகள் தெரிகிற போது சில சறுக்கல்கள் ஏற்படுகின்றன. அனைத்துமே மாறக்கூடிய இந்த நாட்டில் ஜாதி மாற முடியாது. பிராமணர் வேறு ஜாதியாக முடியாது, வேற்று ஜாதியினர் பிராமணராக முடியாது. பெருமையோ, இழிவோ பிறப்பில் இருந்து இறப்பு வரை கூடவே வந்து நிற்கிறது.

திராவிடம் என்றால் சமத்துவம்!

இங்கே மேடையில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அன்னை மணியம் மையார் படங்கள் வரிசையாக வைக்கப்பட் டுள்ளன. குறிப்பாகச் சமமாக இருக்கின்றன. இதுவே ஒரு படம் மேலே, கீழே, பக்க வாட்டில் என ஒழுங்கின்றி இருந்தால் சமத்துவம் என்று சொல்ல முடியுமா? 

நம் நாட்டில் எத்தனையோ தலைவர்கள் தோன்றினார்கள். ஜாதி, மதம் குறித்துப் பேசி னார்கள். பெண் கல்வி குறித்துக்கூட பேசினார்கள். ஆனால் இவையனைத்திற்கும் மூல காரணமான கடவுள் மறுப்புக் குறித் துப் பேசியவர்கள் மிக சொற்பம். அந்தக் கடவுள் மறுப்பையும் தீவிர மாகப் பேசிய தலைவர் தந்தை பெரியார். ஜாதி ஒழிப்பு தான் தமிழர் களை ஒற்றுமைப்படுத்தும்; வாழ்வில் முன்னேற்றும்", என சு.குமணராசன் பேசினார். 

ஆய்வு மாணவர்கள் பங்கேற்பு!

தொடர்ந்து தந்தை பெரியார் ஓர் அறிமுகம் மற்றும் மூடநம்பிக்கைகள் என்கிற தலைப்புகளில் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியாரி யலே வாழ்வியல் எனும் தலைப்பில் வி.சி.வில்வம் வகுப்பு எடுத்தனர். இப் பயிற்சிப் பட்டறையில் 67 மாண வர்கள் பங்கு பெற்றனர். இதில் அய். அய்.எம் (மிமிவி), டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சமூக அறிவியல் கூடம் (ஜிமிஷிஷி) மாணவர்கள் கணிசமாக இதில் கலந்து கொண்டனர். பயிற்சிப் பட்டறையில் சிறப்பாகக் குறிப் பெடுத்த அரிபா அன்சாரி, தினேஷ், சங்சய் சுந்தர், செந்தமிழரசி, ரூபன் குட்டி ஆகிய அய்வருக்கும் நூல்கள் பரிசாக வழங்கப் பட்டன.  பயிற்சிப் பட்டறையின் பயன்கள் குறித்து,  தங்களின் கருத்துகளைப் பத்திற்கும்  மேற்பட்ட மாணவர்கள் பகிர்ந்துக் கொண்டனர். பங்கேற்ற மாணவர்கள் அனைவ ருக்கும் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. இறுதியாகப் பயிற்சி மாணவர்கள், பார்வை யாளர்கள், கழகத் தோழர்கள் அனைவரும் குழுவாகப் படம் எடுத்துக் கொண்டனர்.

உழைத்தோருக்குப் பாராட்டு!

நிகழ்வை ஏற்பாடு செய்த கழக பொறுப் பாளர்களையும், பங்கேற்ற மாணவர்களையும் பாராட்டி திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளரும், பெரியாரியல் பயிற்சிப் பட்ட றையின் பொறுப்பாளருமான இரா.ஜெயக்குமார் நிறைவாக உரையாற்றினார்.  மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பொதுவான தோழர்கள் 40 க்கும் மேல் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாள் நிகழ்ச்சியிலும் ரூ.10 ஆயிரத் திற்கு மேற்பட்ட நூல்கள் விற்பனை ஆயின.

பயிற்சிப் பட்டறை வடிவத்திலான பிரச்சார முறை என்பது மராத்திய மாநிலத்திற்குப் புதியது. எனினும் முதல் முயற்சியே அவர்களுக்குப் பெரும் பயன்களைகளையும், வெற்றியையும் கொடுத்துள்ளது!

தொகுப்பு:  வி.சி.வில்வம்


No comments:

Post a Comment