சொந்தக் கட்சி எம்.பி.யை கருப்புக் கொடியுடன் விரட்டிய பா.ஜ.க. தொண்டர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 19, 2023

சொந்தக் கட்சி எம்.பி.யை கருப்புக் கொடியுடன் விரட்டிய பா.ஜ.க. தொண்டர்கள்

ராஜஸ்தான், அக். 19- ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25 அன்று சட்ட மன்ற தேர்தலுக்கான வாக்  குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இந்த வேட்பாளர் பட்டியலில் மேனாள்  முதல மைச்சர் வசுந்தரா ராஜேவின்  ஆதரவாளர்களுக்கு சீட் ஒதுக்க வில்லை என பாஜகவிற்குள் கடும்  கோஷ்டிப் பூசல் உருவானது. வசுந்தரா ராஜே தலைமையில் ஒரு அணியாகவும், ஒன்றிய அமைச்சர்கள்  அடங்கியது ஒரு அணியாகவும் என  பாஜக 2 அணிகளாகப் பிரிந்துள்ளன. 

இந்நிலையில், ஜோத்வாரா தொகுதியில் தற்போது எம்பியாக இருக்கும் ராஜ்யவர்தன் சிங்  ரத்தோருக்கு சீட் வழங்கப்பட்டுள் ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  வசுந்தரா ராஜேவின் விசுவாசியான  ராஜ்பால் சிங் செகாவத்தின் ஆத ரவாளர்கள் 200-க்கும் மேற்பட் டோர் சமீபத்தில் சாலையில் இறங்கி போராடினர்.  

இந்நிலையில், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வாக்குச்சாவடி முகவர்  களை சந்திக்க ஜோத்வாரா தொகுதி பக்கம் சென்று கொண்டி ருந்தார். அப் பொழுது ஜெய்ப்பூருக்கு அருகே ஜாப்னரில் ராஜ்பால் சிங் செகாவத் ஆதரவாளர்கள் ராஜ்யவர்தன் சிங்கின் காரை மறித்து கருப்புக் கொடி காட்டினர். 

காரில் இருந்து கீழே இறங்கி வந்த ராஜ்யவர்தன் சிங்,  ராஜ்பால்  சிங் ஆதரவாளர்களுக்கு இனிப்பு  ஊட்ட முயன்றார். ஆனால் அவர்கள் இனிப்பை வாங்கிக் கொள்ளாமல் கருப்புக் கொடியுடன் 

தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் அதிருப்தி அடைந்த ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வந்த வழியாகவே திரும்பிச் சென்றார். 

சீட் வழங்காத காரணத்தினால் சொந்தக் கட்சி எம்பியையே தொகுதிக்குள் விடாமல் கருப்புக் கொடியுடன் விரட்டியடித்த நிகழ்வு பா.ஜ.க.வை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

No comments:

Post a Comment