பிரதமரின் வருகைக்காக காத்திருக்கிறதாம் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 1, 2023

பிரதமரின் வருகைக்காக காத்திருக்கிறதாம் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்?

திருச்சி,அக்.1- திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் இரண்டு லட்சம் மாணவர்களுக்கு பட்டம் வழங்கவில்லை. எனவே உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. 

இதுகுறித்து கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக் கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த  156 உறுப்பு கல்லூரிகளை உள்ளடக் கியது. இங்கு சுமார் 2 லட்சம் மாணவர்கள், கடந்த 2 ஆண்டுகளில் இளநிலை, முதுநிலை, பிஎச்டி படித்து முடித்துவிட்டு பட்டம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். மாணவர் கள் படித்து முடித்தவுடன் வழங்கப்படும் புரவிஷனல் (தற்காலிக) சான்றிதழ் 6 மாதம் மட்டுமே செல்லுபடியாகும். வெளிநாடு செல்லவும், அரசு-தனியார் நிறுவனங்களில் வேலை பெறவும், மேல்  படிப்பிற்கும் பட்டச் சான்றிதழ் தேவைப்படும். இந்நிலையில், பட்டம் பெறுவதற்காக சுமார் 2 லட்சம் மாண வர்கள் காத்திருக்கிறார்கள். ஆண்டு தோறும் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல் கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப் படும். அதன் பிறகு தன்னாட்சி மற்றும் இணைப்பு கல்லூரிகள் பட்டமளிப்பு விழா நடத்தும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக 2021-2022, 2022-2023 ஆண்டுகளுக்கு பட்ட மளிப்பு விழா நடத்தவில்லை.  

தமிழ்நாடு ஆளுநர் தேதி தரவில்லை என கூறி, காலம் கடத்தி வந்த பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கடந்த ஆக.30 அன்று பட்டம் விடும் போராட்டம் நடத்தப்பட்டது. அதை யொட்டி ஆளுநர் தேதி பெற்று விரைவில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என அறி விக்கப்பட்டது. ஆனால், தற்போது பிரதமர் மோடியை அழைத்து பட்டமளிப்பு விழா நடத்த தேதி கேட்டு கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.  பல்கலைக்கழக துணைவேந் தர் செல்வம் 2024 பிப்ரவரியில் ஓய்வு பெறும் நிலையில், 2 லட்சம் மாணவர்களுக்கு பட்டம் வழங்காமல், பிரதமர் மோடி எப்போது வரு வாரோ, அப்போதுதான் பட்டம் தருவோம் என்று சொல்வது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.  5 மாநில தேர்தல் பிரச்சாரம் துவங்கியுள்ள நிலையில், இன்று (1.10.2023) முதல் தெலங்கான மாநிலத் தேர்தல் பிரச் சாரத்தை பிரதமர் மோடி துவங்க உள்ளார். 

இந்தப் பின்னணியில் தற்போது பிரதமர் வருவது கேள்விக்குறியே. எனவே பல்கலைக் கழக துணைவேந்தரின் இதுபோன்ற அரசி யல் உள்நோக்கம் கொண்ட செயல், மாண வர்களின் நலனுக்கு உகந்ததல்ல. படித்து முடித்த மாணவர்கள் அனைவருக்கும் உடனே பட்டம் வழங்குவதற்கான ஏற் பாட்டை செய்யவேண்டும். இந்த விவகாரத் தில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை உடனடி யாக தலையிட வேண்டும். இல்லை யெனில் மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment