வழிகாட்டும் தமிழ்நாடு சென்னை அரசு பொது மருத்துவமனையில் குஜராத் மாநில 60 மருத்துவர்கள் பார்வையிட்டனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 4, 2023

வழிகாட்டும் தமிழ்நாடு சென்னை அரசு பொது மருத்துவமனையில் குஜராத் மாநில 60 மருத்துவர்கள் பார்வையிட்டனர்

மருத்துவ முறைகளை கேட்டு அறிந்தனர்

சென்னை, அக். 4  குஜராத் மாநி லத்தில் இருந்து வந்த 60 மருத் துவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்புகளை ஆய்வு செய்தனர். 

இந்தியாவில் சிறந்த மருத்துவ கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மற்ற மாநி லங்களில் தனியார் மருத் துவமனைகளில் இருக்கும் வசதி தமிழ்நாட்டில் அரசு மருத்துவ மனையில் செயல்பட்டு வருகிறது. 

குறிப்பாக ரோபோடிக் அறுவை சிகிச்சை, புற்றுநோய்க்கான சிறப்பு சிகிச்சை உள்ளிட்டவை தமிழ்நாட்டில்தான் முதன்முறை யாக அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. அண்டை மாநிலம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து இலவச சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். சிறந்த மருத்துவ கட்டமைப்பு கொண்ட தமிழ்நாட்டில் அரசு சார்பில் மருத்துவத் துறை மூலம் வழங்கப்பட்டு வரும் மருத்துவப் பயிற்சிக்காக மற்ற மாநிலத்தில் மாணவர்கள் வந்து பயின்று பயிற்சியை நிறைவு செய்கின்றனர். அதுமட்டுமின்றி மற்ற மாநில சுகாதார அமைச்சர்கள் அவ்வப் போது தமிழக மருத்துவக்கட்ட மைப்பை ஆய்வு செய்து வருகின் றனர். அந்த வகையில், நேற்று (3.10.2023) குஜராத் மாநிலத்தில் இருந்து 60 மருத்துவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத் துவமனையின் மருத்துவ கட்ட மைப்பு மற்றும் வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தனர். 

இதுதொடர்பாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறிய தாவது: ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்பை ஆய்வு செய்வதற்காக குஜராத் மாநிலத்தில் இருந்து 60 மருத்துவர்கள் வந்தனர். அவர்கள் குறிப்பாக, அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, டயாலிசிஸ் மய்யம், முழு உடல் பரிசோதனை மய்யம், மார்பக சிகிச்சை பிரிவு, இதயவியல் சிகிச்சை பிரிவு என 10க்கும் மேற்பட்ட துறைகளில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தனர். அதுமட்டுமின்றி இந்த மருத்துவ கட்டமைப்பு குறித்தும், வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அனைத்திற்கும் பதில் அளிக்கப்பட்டது. இந்த மருத்துவ கட்டமைப்பை அவர்களுடைய மாநிலத்தில் எவ்வாறு செயல்படுத் தலாம் என்பது குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment