தஞ்சை அழைக்கிறது - அக்டோபர் 6 தஞ்சையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 3, 2023

தஞ்சை அழைக்கிறது - அக்டோபர் 6 தஞ்சையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்


தஞ்சை, அக்.3- அக்டோபர் 6 அன்று தஞ்சையில் திராவிடர் கழகம் சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கான பாராட்டு விழா, தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. 

திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், திராவிட முன்னேற்றக் கழக தலைவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களும், பல்வேறு அறிஞர் பெருமக்களும், கலந்து கொண்டு உரையாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இவ் விழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறன.

நூற்றாண்டு விழாவினை விளம்பரப் படுத்தும் விதமாக ஒரு மாதத்திற்கு முன்பி ருந்தே தஞ்சை மாநகரம் முழுவதும் சுவர் எழுத்து விளம்பரம், அதிகமாக மக்கள் கூடும்   பகுதிகளில் விளம்பரப் பதாகை (பிளக்ஸ்) விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 

நூற்றாண்டு விழா  அரங்கத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் அரங்கத்தின் நுழை வாயில் முகப்பு மேடை அமைப்பு ஒலி ஒளி சாதனங்கள் அமைப்பு குறித்து நடைபெறும் முன்னேற்பாட்டு பணிகளை 02.10.2023 அன்று காலை 11 மணியளவில் தஞ்சை மாநக ராட்சி மேயர் சண்.இராமநாதன், திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக் குமார், இரா.குணசேகரன், மாநில கிராம பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் இரா.வெற்றிக்குமார், முனைவர் வே.இராஜவேல், மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட், மாநகர துணை தலைவர் செ.தமிழ்செல்வன், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன்,  கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் முனைவர் கி.சவுந்தராஜன், உரத்தநாடு ஒன்றிய துணை தலைவர் இரா.துரைராசு, திருவையாறு கவுதமன், ஒலி ஒளி மற்றும் மேடை அமைப்பு கான்ட்ராக்டர் சேகரன் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டு ஒழுங்குபடுத்தினர்.

அக்டோபர் 6 தஞ்சையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாட்டின் அனைத்து பகுதி களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக வருகை தரும் கழகத் தோழர்களையும் பொது மக்களையும் வரவேற்க தஞ்சை மாநகரம் முழுவதும் அனைத்து சாலைகளிலும் கழகத் தின் இலட்சியக் கொடி பறக்க தயாராகிறது தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment