இதுதான் குஜராத் மாடல் போலி அரசு அலுவலகம் மூலம் ரூ.4.16 கோடி மானியம் சுருட்டல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 30, 2023

இதுதான் குஜராத் மாடல் போலி அரசு அலுவலகம் மூலம் ரூ.4.16 கோடி மானியம் சுருட்டல்!

சோட்டா உதேபூர், அக். 30- குஜ ராத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சோட்டா உதேபூர் மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக் கான செயல் பொறியாளர் அலுவலகத்தில் இருந்து நடப்பாண்டிற்கான சில அரசுத் திட்டங்களுக்கு ரூ.3.75 கோடி மானியம் கோரி திட்ட நிர்வாக அலுவலகத்திற்கு ஆவ ணங்கள் வந்துள்ளன. இதில் சந்தேகமடைந்த உயர் அதிகாரிகள் விசா ரணை நடத்தியதில், நீர்ப் பாசன துறைக்கு சோட்டா உதேபூரில் செயற்பொறி யாளர் அலுவலகமே இல்லை என்கிற அதிர்ச் சித் தகவல் வெளியானது.

அதைவிட அதிர்ச்சி கரமாக, கடந்த 2021-2022 மற்றம் 2022--2023 நிதி யாண்டுகளில் போலி அரசு அலுவலகத்திற்கு அரசு மானியமாக முறையே ரூ.197 கோடியும், ரூ218 கோடியும் நிதி விடுவிக்கப் பட்டுள்ளது. இந்த நிதி மொத்தமும் டிஜிட்டல் முறையில் இ-பேமெண்ட் டாக தரப்பட்டுள்ளது)

இதுதொடர்பாக காவல் துறையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலி அரசு அலுவலகத்தை நடத்தி வந்த சந்தீப் ராஜ்புத் மற்றும் அவரது கூட் டாளி அரசு கான்ட்ராக் டர் அபு பக்கர் சையத் ஆகி யோர் கைது செய்யப் பட்டுள்ளனர். சந்தீப் ராஜ்புத் தன்னை ஒரு அரசு அதிகாரி எனக் கூறி 2021இல் இந்த போலி அரசு அலுவலகத்தை அமைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

No comments:

Post a Comment