மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும்! தோல்வி ஏற்படும் தொகுதி மாவட்ட செயலாளர் நீக்கப்படுவார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 2, 2023

மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும்! தோல்வி ஏற்படும் தொகுதி மாவட்ட செயலாளர் நீக்கப்படுவார்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை, அக. 2- மக்களவை தேர்தலில் திமுக உள்ளிட்ட கூட் டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் தோல்வி அடைந்தால், சம்பந்தப் பட்ட மாவட்டச் செயலாளர் மற்றும் தோல்விக்கு காரணமான வர்கள் மீது பாரபட்சமின்றி நட வடிக்கை எடுக்கப்படும். மாவட்ட செயலாளர் நீக்கப்படுவார்.

தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டால், அமைச்சர், மூத்த நிர்வாகி என பார்க்க மாட்டேன் என்று திமுக மாவட்டச் செயலா ளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் முனைப்பில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ‘இண்டியா’ கூட்ட ணியை அமைத்துள்ளன. இக்கட்சி களின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டம் சமீபத் தில் மும்பையில் நடைபெற்ற நிலையில், தற்போது தொகுதி பங்கீடு தொடர்பாக அடுத்தகட்ட ஆலோசனை நடந்து வருகிறது.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பா ளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நேற்று (1.10.2023) நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், மாவட்டச் செயலா ளர்கள், தொகுதி பொறுப்பா ளர்கள், தலைமைக் கழக நிர்வா கிகள் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்தில் இருந்தபடி இக்கூட்டத்தில் பங் கேற்றார்.

அவர் பேசியதாவது: பொது முக்கியத்துவம் வாய்ந்த சில கருத்து களை பரிமாறிக்கொண்டு, விரைந்து செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். கடந்த மக்களவை தேர்தலில் புதுச்சேரி உட்பட 39 தொகுதிகளை வென்றோம் என் றால், எதிர்வரும் மக்களவை தேர் தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.

தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதும் வெற்றியடைய வேண் டும் என்பதற்காகவே 'இண்டியா' கூட்டணியை அமைத்துள்ளாம். தேசிய, மாநில ஆளும் கட்சிகள், வலுவான மாநில கட்சிகள் இக் கூட்டணியில் இடம் பெற்றுள் ளன.

‘மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது. 'இண்டியா' கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்’ என்ற கருத்து பரவலாக ஏற்பட்டு விட்டது. இந்த நேரத்தில், நமது பொறுப்பு, கடமை அதிகமாகி யுள்ளது. மக்களவை தேர்தல் பணியை 6 மாதம் முன்பே நாம் தொடங்கிவிட்டோம்.

நமது வெற்றிக்கு அடித்தளமாக விளங்கும் வாக்குச்சாவடி பொறுப் பாளர்களை நியமித்தோம். அவர் களுக்கு 3 பயிற்சி பாசறை கூட் டங்கள் இதுவரை நடைபெற் றுள்ளன.

அடுத்ததாக திருவண்ணா மலையில் வடக்கு மண்டல பயிற்சி பாசறை கூட்டமும், சென்னையில் மண்டல வாக்குச்சாவடி பொறுப் பாளர்கள் ஆலோசனைக் கூட்ட மும் நடக்க உள்ளன. நான் சொன் னதை தொடர்ந்து கூறிவருவதை செயல்படுத்தினாலே, முழு வெற் றியை அடையலாம். எந்த ஒரு தனிமனிதரையும்விட இயக்கமும், இயக்கம் அடைய வேண்டிய வெற்றியும்தான் முக்கியம். மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். 

அதை வாக்குகளாக மாற்ற திட்டமிட்டு உழையுங்கள். உழை ப்பும், செயல்பாடும்தான் வெற் றியை பெற்றுத் தரும். திமுக கூட்டணி அனைத்து தொகுதியி லும் வெற்றி பெற பாடுபடுங்கள். இவ்வாறு முதலமைச்சர் பேசி னார்.

இதற்கிடையே, பல்வேறு மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளையும் முதலமைச்சர் கேட்டறிந்தார். கட்சிப் பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக குறிப் பிட்ட சிலரிடம் விசாரித்தார். சிலர் தங்கள் பகுதிக்கு கூடுதல் நிர்வாகிகளை நியமிக்க அனுமதி கோரினர்.

கட்சியினரின் செயல்பாடுகள் குறித்த பொதுவான கருத்துகளை யும் கூறினர். அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் உள்ள விதிகளை தளர்த்துமாறு சிலர் கோரிக்கை விடுத்தனர்.

இதன் பின்னர் பேசிய முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், தான் ஏற் கெனவே அறிவுறுத்தியும், வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் நியமன விஷயத்தில் மெத்தனமாக செயல் பட்டு வருவதாகவும், இது நல்லது கிடையாது என்றும் 3 அமைச்சர் கள் உள்ளிட்ட 7 மாவட்டச் செய லாளர்களை குறிப்பிட்டு எச்சரித் துள்ளார். இதற்காக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் கண்டிப்புடன் கேட்டுள் ளார்.

“மக்களவை தேர்தலில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தோல்வி அடைந் தால், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர் மற்றும் தோல்விக்கு காரணமானவர்கள் மீது பாரபட்ச மின்றி நடவடிக்கை எடுக்கப்படும். 

மாவட்டச் செயலாளர் நீக்கப் படுவார். தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டால், அமைச்சர், மூத்த நிர்வாகி என பார்க்க மாட்டேன்” என்றும் எச்சரித் துள்ளார். 

“சில இடங்களில், தொகுதி பொறுப்பாளர்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் ஒத்துழைப்பும், உரிய மரியாதையும் தருவது இல்லை  என புகார்கள் வருகின்றன. மாவட் டச் செயலாளர்கள் இனியாவது சரியாக நடந்துகொள்ள வேண் டும். தொகுதி பொறுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கியுள்ள சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வாரம் ஒருமுறை சென்று மக்களவை தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த  வேண்டும். நிர்வாகிகளின் களப் பணிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்” என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தி யுள்ளார்.

No comments:

Post a Comment