தமிழ்நாட்டில் டிசம்பர் 31 வரை ஞாயிறு தோறும் ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 26, 2023

தமிழ்நாட்டில் டிசம்பர் 31 வரை ஞாயிறு தோறும் ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்

சென்னை, அக். 26 -  வடகிழக்குப் பருவமழையில் ஏற்படும் சுகாதார பாதிப்புகளை தவிர்க்க மழைக்கால மருத்துவ முகாம் கள் 10 வாரங்களில் பத்தாயிரம் இடங்களில் நடத்தப்பட உள் ளது என அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

“தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் நடைப்பயிற்சி திட்டம் தொடங்கப்பட உள்ளது. தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வருகின்ற நான்காம் தேதி சென்னை பெசன்ட் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹெல்த் வாக் நடைபாதையை திறந்து வைப்பதுடன் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் இந்த நடைப் பயிற்சி திட்டத்தை துவக்கி வைக்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைப்பதற்கு  சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் சாலைகளில் காலை 5 மணிக்கு தொடங்கி காலை 8 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட உள்ளது. 

வயது முதிர்ந்தவர்கள் நடைப் பயிற்சி செய்வதற்கான வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளது. வரும் 4ஆம் தேதி தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பெசண்ட் நகர் முத்துலட்சமி பூங்காவிலிருந்து நடைப்பயிற்சி மேற்கொண்டு பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட் டுள்ள மேடையில் மற்ற 37 மாவட்டங்களிலும் இந்த லீமீணீறீtலீ ஷ்ணீறீளீ என்ற திட்டத்தினை தொடங்கி வைக்கிறார். 

இதில்அரசியல் மற்றும் சினிமா துறையில் இருக்கக்கூடிய  5000 மேற்பட்ட நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம்  தொடங்கப் பட்ட நாள் முதல் மாதந்தோறும்  முதல் ஞாயிற்றுகிழமைகளில் மருத்துவ முகாம் அமைக்கப் படும். மேலும் நடப்பவர்களுக்கு ஓ ஆர் எஸ் கரைசல், குடிநீர், எலுமிச்சை சாறு போன்றவை வழங்க சுகாதாரத் துறையால் திட்டமிடப்பட்டுள்ளது இதற்கான நிதி அந்தந்த தொகுதி சட்டமன்ற உறிப்பினர் மற்றும் சி .எஸ்.ஆர். நிதி தொகுதி நிதி யில் செய்யப்பட்ட உள்ளது. 

கரோனா காலத்திற்குப் பிறகு சமீப காலமாக இளம் வயதினர் உட்பட பலருக்கும் மாரடைப்பு அதிகரித்து வரு கிறது-. மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் அவசியம் ஆகி றது. எனவே, மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ஹெல்த்வாக் திட்டம் முன்னெடுக்கபட்டுள்ள தாக தெரிவித்தார்.

மேலும், “அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான காலியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ள நிலை யில் அவற்றை தமிழ்நாடு அரசே நிரப்பிக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென தொடர்ச்சியாக ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப் பட்டுள்ளது.

இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆராய்ந்து சட்டரீதியான நடவடிக்கை அடுத்த கட்டமாக எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த 10 மாதங்களில் 5 ஆயிரத்து 600 பேர் டெங்குவி னால்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 5 பேர்  உயிரினம் இருப் பதாக குறிப்பிட்ட அவர் வரும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழை காரண மாக டெங்கு பாதிப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என் பதால் வடகிழக்குப் பருவமழை யில் ஏற்படும் சுகாதார பாதிப் புகளை தவிர்க்க மழைக்கால மருத்துவ முகாம்கள் 10 வாரங்க ளில் பத்தாயிரம் இடங்களில் நடத்தப்பட உள்ளது என்றார்.  

அதன்படி வருகின்ற 29ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதத் தில்  நான்கு வாரங்கள் , டிசம்பர் மாதத்தில் 5 வாரங்கள் என பத்து வாரம் ஞாயிற்றுக்கிழமை களில்  1000 முகாம் வீதம்  பத்தாயிரம் இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment