திராவிடர் கழகத்தின் கருத்துரு (31-சி) சட்டமன்றத்தில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 7, 2023

திராவிடர் கழகத்தின் கருத்துரு (31-சி) சட்டமன்றத்தில்

1992 நவம்பர் 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி இடஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்கு மேல் போகக்கூடாது. தமிழ்நாட்டிலோ 69 சதவிகித இடஒதுக்கீடு. இந்த நிலைமையில் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் மாநில அரசே ஒரு சட்டத்தை நிறைவேற்றலாம் என்ற கருத்துரு (31சி), ஒன்றை அரசுக்குத் தெரிவித்தார். அதன்படி அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழ்நாடு அரசால் கூட்டப்பட்டது. (26.11.1993) திராவிடர் கழகம் கொடுத்த கருத்துருவினை அனைத்துக்கட்சிக் கூட்டம் ஏற்றது. அதன்படி 30.12.1993 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு மறுநாள் (31.12.1993) ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 

-------------

ஜாதிப் பெயர்களின் மாற்றம்!

"பறையன்" 1992இல் "ஆதிதிராவிடர்"

"அம்பட்டன்" 1939இல் "மருத்துவர்"

"இடையர்" 1935இல் "யாதவர்"

"செம்படவன்" 1947இல் "பருவத ராஜகுலம்"

"வண்ணான்" 1948இல் "ராஜாக்கர்" 

No comments:

Post a Comment