அரசு வழக்குரைஞர்களின் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்வு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையை வழங்கினார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 17, 2023

அரசு வழக்குரைஞர்களின் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்வு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையை வழங்கினார்!

சென்னை, அக்.17- சென்னை உயர்நீதி மன்றத்தின் கீழ்மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கினை நடத்திடும் அரசு வழக்குரைஞர்களின் கட்டண விகிதத்தை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு வழக் குரைஞர்களுக்கு வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (16.10.2023)தலைமைச் செயலகத்தில், சென்னை உயர்நீதிமன்றத் தின் கீழ் மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கினை நடத் திடும் அரசு வழக்குரைஞர்களின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி வழங்குவதற்கான அரசா ணையை விழுப்புரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர் டி.எஸ். சுப்ரமணியன், சென்னை மாநகர குற்ற வியல் அரசு வழக்குரைஞர் தேவராஜன், இராமநாதபுரம் மாவட்ட அரசு குற்ற வியல் வழக்குரைஞர் கார்த்திகேயன் மற்றும் சென்னை மாநகர உரிமையியல் அரசு வழக்குரைஞர் ஷாஜகான் ஆகியோரிடம் வழங்கினார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கினை நடத்திட அரசு வழக்குரைஞர்கள் பலர் நியமிக்கப்பட்டு, சுமார் 700-க்கும் மேற்பட்ட அரசு வழக் குரைஞர்கள் அரசு சார்பாக வழக்கினை நடத்தி வருகின்றனர்.

இந்நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தும் அரசு வழக்குரைஞர்களின் கட்டண விகிதம் 1995-ஆம் ஆண்டிற்குப் பிறகு மாற்றி அமைக்கப்படாமல் இருந் தது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2006-ஆம் ஆண்டு பதவியேற்றதும், அரசு வழக்குரைஞர்களின் கட்டண விகிதத்தை மாற்றி அமைத்திட 2007-ஆம் ஆண்டு ஒரு குழுவை அமைத்து, அக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், 2011ஆம் ஆண்டு கட்டண விகிதம் கணிசமாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. 2011-ஆம் ஆண்டிற்குப்பின், 10 வருட காலம் கட் டண விகிதம் ஏதும் மாற்றி அமைக்கப் படவில்லை.

அரசு வழக்குரைஞர்களின் பங்க ளிப்பு மற்றும் பணிப்பளுவினை கருத் திற்கொண்டு இவர்களது கட்டண விகிதத்தை மாற்றி அமைப்பது அவ சியம் எனக் கருதி அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா அவர்கள் அளித்த பரிந்துரை கடிதத்தை தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்தார்.

இதனை அரசு கவனமுடன் பரிசீலித்து, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் அவர்களின் பரிந்துரை யின் அடிப்படையில், அரசு வழக் குரைகளின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் உயர்நீதி மன்றம் தவிர்த்த அனைத்து நீதிமன்றங் களில் சிவில் மற்றும் குற்றவியல் வழக் குகளை நடத்தும் அனைத்து அரசு வழக்குரைஞர் களும் பயன் பெறு வார்கள்.

இந்நிகழ்ச்சியில், சட்டத் துறை அமைச்சர் எஸ்.இரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன் மைச் செயலாளர் திருமதி பெ.அமுதா, அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா ஆகி யோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment