சென்னையில் அக்டோபர் 28இல் வேலைவாய்ப்பு முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 26, 2023

சென்னையில் அக்டோபர் 28இல் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை, அக். 26 - கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வேலைவாய்ப்பு முகாம், வரும் 28ஆம் தேதி நடக்கிறது. சைதாப்பேட்டை, மேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், காலை 8:00 - மதியம் 3:00 மணி வரை, இம்முகாம் நடக்கிறது.

இதில், 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களில் இருந்து, 15,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யஉள்ளனர். எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, அய்.அய்.டி., உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்; அனுமதி இலவசம். பங்கேற்க ஆர்வமுள்ளோர் www.tnprivatejobs.tn.gov.in 

 என்ற இணை தளத்தில் பதிவு செய்யலாம். விவரங்களுக்கு, 044- - 2461 5160 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment