தமிழ்நாடு, புதுச்சேரியில் 28ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 23, 2023

தமிழ்நாடு, புதுச்சேரியில் 28ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

 சென்னை, அக்.23 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 28ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்கள், வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 26ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் 27, 28 ஆகிய தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment