வடகிழக்கு பருவமழை அக்டோபர் 22ஆம் தேதி தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மய்யம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 20, 2023

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 22ஆம் தேதி தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மய்யம்

சென்னை, அக்.20  நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை நேற்றுடன் (19.10.2023) விலகியது. தமிழ்நாட்டில் வரும் 22-ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம்தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மய்ய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் சென் னையில் செய்தியாளர்களிடம் கூறி யதாவது: இந்தியாவில் இருந்து தென்மேற்குப் பருவமழை அக்.19-ஆம் தேதி (நேற்று) விலகியுள்ளது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு 35 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக் கத்தைவிட 8 சதவீதம் அதிகம். சென் னைக்கு 77 செ.மீ. மழை கிடைத்துள் ளது. இது வழக்கத்தைவிட 74 சதவீதம் அதிகமாகும். இந்நிலையில், வரும் 22-ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதி களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக பெய் யும் அளவிலேயே மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டிற்கு 44 செ.மீ. மழை கிடைக்கும்.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவக்கூடும். இது நாளை (அக். 21) தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். 

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலு வடைந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 23ஆ-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அரபிக்கடல் மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் நிலவக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடக்க நிலையில் வலு குறைந்து காணப்படும்.   22, 23-ஆம் தேதிகளில் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தில் சில இடங்களிலும், உள் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment