நாடு முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 11, 2023

நாடு முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள்

புதுடில்லி,அக்.11- இந்தியாவில் 20 போலி பல்கலைக்  கழகங்கள் இருப்ப தாக பல்க லைக்கழக மானியக் குழு (யுஜிசி)செயலர் மணிஷ் ஜோஷி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறு கையில், Òஆந்திரா, டில்லி, கருநாடகா, கேரளா, மகாராட்டிரா, புதுச்சேரி, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 20 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. 

யுஜிசி விதிகளுக்கு மாறாக பல்வேறு  கல்வி நிறுவனங்கள் பட்டங்களை வழங்குவதாக எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த  கல்வி நிறுவனங்க ளால் வழங்கப்படும்  பட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு அல்லது உயர்கல்வி வாய்ப்புகளை பெற  முடியாது. இந்தப் பல்கலைக் கழகங்களுக்கு எந்தப் பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை. 

மாணவர்கள் கல்லூரிகளில் சேரும் முன்பு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் குறித்த விவரங்களை  www.ugc.ac.in என்ற இணை யதளத்தில் தெரிந்து கொள்ள வேண் டும். யுஜிசி விதிகளுக்கு மாறாக பட்டப்  படிப்பை வழங்கும் நிறுவனங்கள் குறித்து ugcampc@gmail.com என்ற  மின்னஞ்சலுக்கு தெரிவித்தால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும்” என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment