பசியுடன் உறங்கச் செல்லும் குழந்தைகள் அமெரிக்காவில் 18 சதவீதம் பேர்: ஆய்வில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 14, 2023

பசியுடன் உறங்கச் செல்லும் குழந்தைகள் அமெரிக்காவில் 18 சதவீதம் பேர்: ஆய்வில் தகவல்

வாசிங்டன், அக். 14- அதிக அளவு பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவையே உலகளாவிய பட்டினிக்கு காரணம் என வேர்ல்ட் விசன்  இண்டர் நேஷனல் என்ற மனிதநேய குழு, 16 நாடுகளில் அனைத்து வருமான நிலை களிலும் உள்ள 14,000 க்கும் மேற்பட்டவர்களி டம் நடத்திய கருத்துக் கணிப்பு  ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. 

அக்டோபர் 11 திங்கட்கிழமை  பன்னாட்டு உணவு தினத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, பன்னாட்டு அரங்கில் முக்கிய இடத்தை பிடித்துள் ளது.அந்த  ஆய்வில்  59 சத வீதமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைக ளின்  பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து மிகவும் கவலை கொண்டுள்ளதாகவும், 46 சதவீத மானோர் ஊட்டச்சத்துள்ள உணவு வாங்க தேவையான பொரு ளாதார வேலைகள் கிடைப்ப தில்லை எனவும் கூறியுள்ளனர்.  37 சதவீத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு  ஒவ்வொரு நாளும் சரியான ஊட்டச் சத்தை கொடுக்க முடியவில்லை எனவும்  21 சதவீத மானோர் கடந்த மாதம் தங்கள் குழந்தைகள் முறையான உண வின்றி பட்டினியாக இருந்ததாகவும்  கூறியுள்ளனர். அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஆய்வில்  18 சதவீத மான மக்கள்   தங்கள் குழந்தைகளில் ஒருவர்  பசியுடன் தூங்கும் நிலைக்கு சென்றதா கக் கூறியுள்ளனர்.  மேலும் அடிப்படை ஊதியம்  இல் லாத  நாடுகளில்  பசியுடன் படுக் கைக்குச் செல்லும் குழந்தைகளின் அளவு  38 சத வீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

 பசி என்பது ஒரு நாடு அல்லது உலகின் ஒரு பகுதிக்கு மட்டுமான தல்ல, அது ஒரு பன்னாட்டு பிரச்சனை என வேர்ல்ட் விஷன் இண்டர் நேஷனல் அமைப்பின் தலைவர் ஆண்ட்ரூ மோரேலி ஒரு அறிக்கையில் தெரிவித்துள் ளார். தங்கள் குழந்தைகள் பசியுடன் உறங்கச் சென்றதற்கு முக்கியக் காரணம் பணவீக்கம் மற்றும் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு ஆகியவையே என 46 சதவீதமா னோரும்  குறைவான குடும்ப  வருமானம் என  39 சதவீத மானோரும் , பசியை நீக்க அரசு போதுமான  கவனம் செலுத்தாதது  காரணம் என 25 சதவீதமானோரும்  கூறியுள்ளனர். 


No comments:

Post a Comment