ரூபாய் 10,000 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பவில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 22, 2023

ரூபாய் 10,000 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பவில்லை

புதுடில்லி அக்.22  ரூ.10,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மக்களிடம் இன்னும் உள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, அதற்கு மாற்றாக ரூ.2,000 நோட்டுகள் கடந்த 2016ஆ-ம்ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டன. இந்நிலை யில் ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ்வங்கி கடந்த மே 19ஆ-ம் தேதிஅறிவித்தது. இவற்றை வங்கிகளில் வைப்புச் செய்யவும்,மாற்றிக் கொள்ளவும் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்பின் இந்த அவகாசம் அக்டோபர் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தனிநபர்கள், தாங்கள் வைத்துள்ள ரூ.2,000 நோட் டுக்களை நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கிக் கிளைகளில் செலுத்தி தங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இந்த மாத துவக்கத்தில் அளித்த பேட்டியில் ரூ.2,000 நோட்டுக்களில் 87 சதவீதம் வங்கிக்கு டெபாசிட்டாக திரும்பிவிட்டது என்றும், மீதிப் பணம் நாடுமுழுவதும் மாற்றப்பட்டு வருவ தாகவும் தெரிவித்தார்.

 இந்நிலையில் டில்லியில்  ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக்தி காந்த தாஸ் அளித்த பேட்டியில், ‘‘ ரூ.2,000 நோட்டுக்கள் வங்கிக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. ரூ.10,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுக்கள் இன்னும் மக்களிடத்தில் உள்ளன. அவை வங்கிக்கு திரும்ப வரும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.


No comments:

Post a Comment