‘‘கலைஞர் 100-40 உடன்பிறப்பின் உயிர்த் துடிப்பு கலைஞர்!'' பொதுக்கூட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 1, 2023

‘‘கலைஞர் 100-40 உடன்பிறப்பின் உயிர்த் துடிப்பு கலைஞர்!'' பொதுக்கூட்டம்!

முத்தமிழறிஞர் கலைஞர் பதவிக்கு முன்னுரிமை தராது - கொள்கைக்கே முன்னிடம், முதலிடம் தந்து ‘மானமிகு சுயமரியாதைக்காரராக' வாழ்ந்தார்!

தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

சென்னை, அக்.1  முத்தமிழறிஞர் கலைஞர் பதவிக்கு முன்னுரிமை தராது - கொள்கைக்கே முன்னிடம், முதலிடம் தந்து மானமிகு சுயமரியாதைக்காரராக வாழ்ந்தார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர்  நூற்றாண்டு விழாவை யொட்டி ''கலைஞர் 100-40 உடன்பிறப்பின் உயிர்த்துடிப்பு கலைஞர்!'' என்ற தலைப்பில், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் 100 தொடர் கூட்டங்களின் 40 ஆவது முதற்கட்ட நிறைவுப் பொதுக்கூட்டம் நேற்று (30.9.2023) மாலை 7 மணிக்கு நம்மாழ்வார்பேட்டை சின்னபாபு தெரு - அய்ந்து விளக்கு அருகில் சிறப்பாக நடைபெற்றது.

மிகுந்த எழுச்சியோடு நடைபெற்ற இப்பொதுக்கூட் டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் டி.லோகேஷ் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். பகுதி தி.மு.க. செயலாளர் எம்.சாமிகண்ணு, கனல் கங்கா, இசட் ஆசாத் எம்.சி., ஆகியோர் உரையாற்றினர்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு - கனிமொழி என்.வி.என்.சோமு

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத் துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் - தமிழ்நாடு அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநிலங்களவை உறுப்பின ரும், தி.மு.க. மருத்துவரணித் தலைவருமான கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோர் நிகழ்ச்சியின் தலைப் பின்படி கருத்துகளையும், நிகழ்வுகளையும் வரிசைப் படுத்தி விளக்கவுரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

நிறைவாக சிறப்புரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அமைச்சர் பி.கே.சேகர் பாபு - செயல்பாபு என்று தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிட்டுப் பாராட்டுமளவுக்குச் சிறப்பாக செயல்பட்டு வருவதைக் குறிப்பிட்டார்.

தற்போது அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு ஆகிய இருவரின்மீதும் அனைத்துத் தரப்பினரின் கவனமும் படிந்து - பார்க்குமளவுக்குக் கொள்கை வீரர்களாக அவ்விருவரும் திகழ்வதாக எடுத்துக் கூறினார்.

'திராவிட மாடல்' ஆட்சியினை நடத்தி வருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியாவின் பிற மாநிலங் களும் பின்பற்றுமளவுக்குப் பள்ளி சிறார் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என பல திட்டங்களை நிறைவேற்றி சாதனையாளராக ஆட்சி நடத்தி வருகின்ற மாட்சியை குறிப்பிட்டுப் பேசினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் பதவிக்கு முன்னுரிமை தராது - கொள்கைக்கே முன்னிடம், முதலிடம் தந்து மானமிகு சுயமரியாதைக்காரராக வாழ்ந்ததையும், இளமையில் சுயமரியாதை இயக்க - திராவிடர் கழகப் பணிகளின்போது தமக்கும், கலைஞருக்கும் கிடைத்த இனிமையான அனுபவ நிகழ்வுகளையும், தமது உடன் பிறப்புகளிடம் கலைஞர் தமது இறுதிக் காலம் வரை வைத்திருந்த அசைக்க முடியாத பாச உணர்வினையும் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு முன் மாதிரியாகத் திகழ்ந்து - இந்தியா விற்கே வழிகாட்டி - 2024 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், 40 தொகுதி களிலும் தி.மு.க. கூட்டணிக்கே வெற்றி என்று குறிப்பிட்டு, மோடி - பி.ஜே.பி. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வீடுதோறும் பிரச்சாரமும், திண்ணைப் பிரச்சாரமும் பெருமளவு பயன்தரும் என்றார்.

விழாவில் கலந்துகொண்ட தமிழர் தலைவருக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு, டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர்.

சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாராஜன் தமிழர் தலைவருக்கு பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் எழுதிய ''தமிழர் திருமணமும் இனமானமும்'' என்ற புத்தகத்தினை நினைவுப் பரிசாக வழங்கினார்.

தி.மு.க. நிர்வாகிகள், தோழர்கள் பலரும் தமிழர் தலைவருக்கு சால்வைகள் அணிவித்து சிறப்புச் செய்தனர்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். கூட்டத்திற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் டி.லோகேசுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணி வித்துப் பாராட்டினார். ஏராளமான மகளிர் இருக்கையில் அமர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியரின் சிறப்புரையை கவனித்துக் கேட்டனர். 75 ஆவது மாவட்ட தி.மு.க. செயலாளர் வி.க.வெங்கடேசன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment