10 - 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை எழுதுவது கட்டாயம் அல்லவாம் ஒன்றிய அரசு திடீர் பல்டி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 9, 2023

10 - 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை எழுதுவது கட்டாயம் அல்லவாம் ஒன்றிய அரசு திடீர் பல்டி!

 நாள்தோறும் ‘‘விடுதலை'' ஏட்டைப் படிப்பீர்!  

நல்லறிவு கருத்துகளை ஏற்பீர்!!

 ‘‘விடுதலை'' ஏடு வெறும் காகிதம் அல்ல 

- விடியலுக்கான போர் ஆயுதம்!

புதுடில்லி, அக்.9- 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண் டுக்கு இருமுறை எழுதுவது கட்டாயம் அல்ல என்று ஒன்றிய கல்வி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். ஒன்றிய கல்வி அமைச்சகம் கடந்த ஆகஸ்டு மாதம் புதிய பாடத்திட்ட கட்டமைப்பை அறிவித்தது.

அதன்படி, மாணவர்கள் 10 மற் றும் 12ஆ-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை எழுதலாம் என்று கூறியது. மாணவர்கள் தேர்வுக்கு சிறப்பாக தயாராக போதிய கால அவ காசம் அளிக்கவும், இரு தேர்வுகளில் எது அதிக மதிப்பெண்ணோ, அதை தக்க வைத்துக்கொள்ளவும் இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது.  இந்நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித் தார். அதில் அவர் கூறியதாவது:-

ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு மாண வர்களை சந்தித்தேன். அவர்கள் அதை வரவேற் றனர். நல்ல யோசனை என்று கூறினர். 2024ஆ-ம் ஆண்டில் இருந்தே ஆண் டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத் தும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். மாணவர்கள் பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத் தால், தங்களுக்கு ஓராண்டு வீணாகி விட்டதாக கருதுகின்றனர். தங்கள் வாய்ப்பு பறிபோய் விட்டதாகவும், இன்னும் சிறப்பாக படித்து இருக்க லாமே என்றும் நினைக்கின்றனர். எனவே, ஒருமுறை மட்டும் தேர்வு நடத் துவதால் ஏற்படும் மனஅழுத்தத்தை தவிர்க்கவே இருமுறை தேர்வு அறிமுகப் படுத்தப்படுகிறது.

பொறியியல் படிப்புக்கான ஜே.இ.இ. நுழைவுத்தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்துவதுபோல்தான் இதை நடத்த உள்ளோம். மாணவர்கள், முதல் பொதுத் தேர்விலேயே தாங்கள் சிறந்த மதிப்பெண் எடுத்திருப்பதாக கருதினால், இரண்டாவது தேர்வை எழுதத் தேவையில்லை. இரு முறையும் தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. இது, அவர்களின் விருப் பத்தை பொறுத்தது.

No comments:

Post a Comment