மகளிர் இட ஒதுக்கீடு : மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றம் ஆனால் செயலுக்கு வருமா - என்பது முக்கிய கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 22, 2023

மகளிர் இட ஒதுக்கீடு : மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றம் ஆனால் செயலுக்கு வருமா - என்பது முக்கிய கேள்வி

புதுடில்லி, செப் 22  மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் 20.9.2023 அன்று நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையிலும் நேற்று 21.9.2023) நிறைவேறியது. 

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப் பட்டு வந்தது. கடந்த 1996ஆ-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவகவுடா தலைமையிலான ஆட்சியின்போது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப் பட்டது. போதிய ஆதரவு கிடைக்காத நிலையில், இந்த மசோதா 1998-இல் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அப் போ தும் போதிய ஆதரவு கிடைக்க வில்லை. கடந்த 1999, 2002, 2003 ஆகிய ஆண்டுகளில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டும் நிறைவேறாமல் போனது. 2010ஆ-ம் ஆண்டில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவே றியது. ஆனால், மக்களவையில் நிறைவேற வில்லை. 

இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் கடந்த 18ஆ-ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்தின் 2-ஆவது நாள் நிகழ்வுகள், புதிய நாடாளுமன்றத்தில் நடந்தன. அப்போது முதல் மசோதாவாக, மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. விவா தத்துக்கு பிறகு, உறுப்பினர் களிடம் வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. மசோதாவுக்கு ஆதர வாக 454 உறுப்பினர்களும், எதி ராக 2 உறுப்பினர்களும் வாக்களித் தனர். பெரும்பான்மை உறுப் பினர்கள் ஆதரவு அளித்த நிலையில், கடந்த 20ஆ-ம் தேதி (நேற்று முன்தினம்) இந்த மசோ தா மக்களவையில் நிறைவேறியது. 

அதைத் தொடர்ந்து, மாநிலங் களவையில் இந்த மசோதாவை ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று (21.9.2023)  தாக்கல் செய்தார். அவர் பேசும்போது, ‘‘மகளிர் மேம்பாட்டுக்காக ஒன்றிய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக் கைகளின் தொடர்ச்சிதான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா. சிறு தொழில்களுக்கு கடன் வழங்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட முத்ரா திட்டத்தில் 68 சதவீத பயனாளிகள் பெண்கள். அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வீட்டு வசதி, எரிவாயு வசதி உள்ளிட்ட பல் வேறு திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்’’ என்றார். 

இதைத் தொடர்ந்து, மாநிலங் களவையில் மசோதா மீது விவாதம் நடைபெற்றது. இந்த மசோதாவுக்கு கட்சி வேறு பாடின்றி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது. மக் களவை, மாநிலங்களவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் தற்போது 15 சத வீதத்துக்கு குறைவாகவே உள்ளது. பல மாநிலங்களின் சட்டப் பேரவையில் பெண்களின் பங்கு 10 சதவீதத்துக்கும் குறைவாக உள் ளது. இந்நிலையில், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment