மத அடிப்படையில் மாணவரை தண்டிப்பது தரமான கல்வி அல்ல: உச்சநீதிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 26, 2023

மத அடிப்படையில் மாணவரை தண்டிப்பது தரமான கல்வி அல்ல: உச்சநீதிமன்றம்

புதுடில்லி,செப்.26- உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்பூர் நகரில் உள்ள குப்பாபுர் கிராமத்தில், வீட்டுப்பாடம் செய்யாத மாணவரை மதரீதியாக ஆசிரியை ஒருவர் திட்டியாக கூறப் படுகிறது. மேலும் அந்த மாணவரை சக மாணவர்கள் கன்னத்தில் அறைந்தனர். ஆசிரியை கூறியதால், அந்த மாணவரை சக மாணவர்கள் அறைந்தனர். இது தொடர்பான காணொலி சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் வெளி யாகின. இதையடுத்து அந்த ஆசிரியை மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி,   காந்தியாரின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபேய் எஸ்.ஓகா, பங்கஜ் மிட்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர் அறையப்பட்ட சம்பவத்துக்கு அதிருப்தி தெரிவித்து நீதிபதிகள் கூறியதாவது:

மதம் காரணமாக மாணவரை அறையுமாறு சக மாணவர்களிடம் ஆசிரியை ஒருவர் கூறினால், என்ன மாதிரியான கல்வி புகட்டப்படுகிறது?

குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் ஒரு மாணவரை தண்டிக்க முற்பட்டால், அங்கு தரமான கல்வி எதுவும் இருக்க முடியாது.

 இந்த வழக்கில், கல்வி உரிமைச் சட்டம் மற்றும் விதிமுறைகளின் கட்டாய கடமைகளுக்கு உடன்படுவதில் மாநில அரசின் தோல்வி முதன்மையாக உள்ளது.

கன்னத்தில் அறையப்பட்ட மாண வருக்கும், அவரை அறைந்த சக மாண வர்களுக்கும் தொழில்முறை ஆலோச கர்கள் மூலம் மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.

இந்த வழக்கை விசாரிக்க ஒரு வாரத்துக்குள் மூத்த அய்பிஎஸ் அதி காரியை உத்தர பிரதேச அரசு நியமிக்க வேண்டும். அந்த அதிகாரி வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

வழக்கு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் அக்டோபர் 30-ஆம் தேதி ஆராய்ந்த பின்னர், வேறு ஏதேனும் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா என பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தனர்.


No comments:

Post a Comment