அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக பசுமை நுகர்வோர் நாள் கடைப்பிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 28, 2023

அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக பசுமை நுகர்வோர் நாள் கடைப்பிடிப்பு

கந்தர்வகோட்டை, செப்.28 புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை  ஒன்றியம், அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக பசுமை நுகர்வோர் நாள் கடைப்பிடிக்கப்பட் டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்ச் செல்வி அனைவரையும் வரவேற்றார்.

சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை ஒருங்கிணைத்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட இல்லம் தேடி கல்வி மய்ய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா உலக பசுமை நுகர்வோர் நாள்  குறித்து உரையாற்றியதாவது:

பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவ தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகவே இயற்கையான பொருள்களையே பயன் படுத்தவேண்டும். நாம் பயன்படுத்தக்கூடிய பொருள்கள் மறுசுழற்சிக்கு உகந்ததாக இருக்கவேண்டும். உலகின் பல பகுதிகளில் பசுமை நுகர்வோர் அமைப்பு மக்களிடம் பசுமையைப் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. செப்டம்பர் 28 ஆம் நாளை பசுமை நுகர்வோர் நாளாகக் கொண் டாடி வருகிறது. மீண்டும் எளிதில் புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்களைப் பயன்படுத் தித்தான் நாம் அனைவரும் வாழ்ந்து வருகி றோம். ஆனால், உலகமோ தற்போது மாபெரும் குப்பைமேடாக மாறி வருகிறது, பூமி வேகமாக வெப்பமடைந்து வருகிறது என்று புள்ளிவிவரங்களை அடுக்குவதைவிட இயற்கையைப் பாதுகாக்க நம்மால் முடிந்த செயல்களை உடனே செய் வது, பூமி சீர் கெடும் விகிதத்தை குறைக்க உதவும்.அதற்கு அனைவரும் பசுமை நுகர்வோராய் மாறு வோம். முடிந்த வரை பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாக்கெட்டுகள் மறுசுழற்சிக்கு உட் படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்க்க ஒவ்வொருவரும் துணிப் பைகளை பயன்படுத்த தனக்குள்ளே உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சிந்தியா, செல் விஜாய் தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment