பா.ஜ.க. அரசின் கொள்கைகளால் பணக்காரர்களுக்கே ஆதாயம் : பிரியங்கா சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 12, 2023

பா.ஜ.க. அரசின் கொள்கைகளால் பணக்காரர்களுக்கே ஆதாயம் : பிரியங்கா சாடல்

ஜெய்ப்பூர், செப்.12 - ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகள் பணக்காரர்களுக்கு ஆதாயமளிக்கக் கூடிய வையே தவிர, ஏழைகளுக்கு அனு கூலமானவை கிடையாது என்று காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். 

ராஜஸ்தானில் விரைவில் சட் டப்பேரவைத் தேர்தல் நடைபெற வுள்ள நிலையில், டோங்க் மாவட்டம், நிவாய் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் அவர் பேசியதாவது:

பிரதமர் வெளிநாடுகளில் பய ணம் மேற்கொள்கிறார். அப் போது தனது நண்பர்களான தொழிலதிபர்களுக்குத் தேவையான ஒப்பந்தங்களை செய்து கொள்கிறார்.

மோடி வெளிநாடுகளில் இருந்து திரும்பிய பிறகு. இந்தியாவின் மதிப்பு உயர்த்துள்ளதாகக் கூறிக் கொள்கிறார். அதன்பின் அவர் தனது நண்பர்களான தொழிலதிபர்களுக்குத் தேவையான ஒப்பந்தங்களை செய்து கொண்டது நமக்குத் தெரிய வருகிறது.

ஒவ்வொரு விஷயத்திலும் மக் களின் நலன்களைவிட தனது நண்பர்களான தொழிலதிபர்களின் நலன்களுக்கே அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார். ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகள் பணக்காரர் களுக்கு ஆதாயமளிக்கக் கூடிய வையே தவிர ஏழைகளுக்கு அனுகூல மானவை கிடையாது. 

ஆட்சியில் தொடர்ந்து நீடிப்ப திலேயே பாஜக கவனம் செலுத்தி வருகிறது. ஏழைகள் மற்றும் மத்திய வகுப்பினர் அக்கட்சியால் அலட் சியம் செய்யப்படுகின்றனர். எண் ணெய் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் லாபம் சம்பாதித்து வரு கின்றன. ஆனால், எரிபொருள்களின் விலை மிக அதிகமாக உள்ளது. பண வீக்கம் விண்ணைத் தொட்டுள்ளது. பணவீக்கத்தால் மக்கள் போராடி வரும் வேளையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு நிவாரண முகாம்களை நடத் தியது.

பாஜக அரசு மக்களின் உரி மைகளை கடந்த எட்டு ஆண்டு களில் பறித்து விட்டது. ஓய்வூதி யங்கள் நிறுத்தப்பட்டன.  ராணுவத் துக்கு ஆளெடுப்பதற்கான வாய்ப்பு மங்கிவிட்டது. அதற்கு பதிலாக அக்னிவீர் திட்டத்தை மோடி கொண்டுவந்துள்ளார். 

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு பல்வேறு திட்டங் களை அமல்படுத்தியுள் ளது. மக்கள் தங்களுக்காக உழைக் கக்கூடிய ஓர் அரசைத் தேர்ந் தெடுக்க வேண்டுமே தவிர  ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் வாக்கு கோருவோரைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்றார்.

இக்கூட்டத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் பேசுகையில், சோனியா காந்தி குடும்பத்தை பாஜக விமர்சிக்கிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் கடந்த 30 ஆண்டுகளில் பிரதமரா கவோ அமைச்சராகவோ இல்லை. அக்குடும்பத்தினர் இந்த தேசத் துக்காக அனைத்தையும் வழங்கியுள்ளனர். மேனாள் பிரதமர் களான இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் நாட்டுக்காக உச்சபட்ச தியாகத்தைச் செய்தனர். நாட்டில் தற்போது நிலவி வரும் சூழல் அபாயகரமாக உள்ளது. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. அரசியல் சாசனம் சீர்குலைக்கப்பட்டுள்ளது' என்றார்.

No comments:

Post a Comment