உடலுறுப்பு கொடை செய்த பெண்ணின் உடலுக்கு மரியாதை செய்த மருத்துவமனை நிர்வாகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 8, 2023

உடலுறுப்பு கொடை செய்த பெண்ணின் உடலுக்கு மரியாதை செய்த மருத்துவமனை நிர்வாகம்

சென்னை, செப்.8 - சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த ஆந்திர இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப் பட்டன. 

ராஜீவ் காந்தி அரசு பொது 6மருத்துவமனையில் வைக்கப் பட்டிருந்த அவரது உடலுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள் பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மரியாதை அணிவகுப்பு வழங்கி விடை கொடுத்தனர்.

இது தொடர்பாக மருத்துவ மனையின் முதல்வர் டாக்டர் எ.தேரணிராஜன் கூறியதாவது: 

ஆந்திர மாநிலம், பிச்சாட் டூரைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், அண்மையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண் டிருந்த போது நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தார்.

ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 4-ஆம் தேதி அதிகாலை அப்பெண் அனுமதிக்கப்பட்டார். பல்துறை மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்த போதிலும், அவை பலனளிக்காமல் அவர் 5.9.2023 அன்று காலை மூளைச் சாவு அடைந்தார். 

இதுதொடர்பாக அவரது பெற்றோரிடம் தெரிவித்து ஆறுத லளித்த பிறகு, அவர்கள் அந்தப் பெண்ணின் உடல் உறுப்புகளை கொடையாக வழங்க முன்வந் தனர். அதன்படி, அவரது இரு சிறுநீரகங்கள், கல்லீரல், இரு நுரையீரல்கள் கொடையாக பெறப்பட்டன.

உடல் உறுப்புகளை கொடை யாக அளித்து பிறருக்கு மறுவாழ்வு அளிப்பவருக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அந்தப் பெண்ணின் உடலுக்கு மரியாதை அணிவகுப்பு நடத்தி னோம். அவரது உடல் பேட்டரி வாகனத்தில் எடுத்துச் செல்லப் பட்டு இரு புறமும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாண வர்கள், மருத்துவப் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அணிவகுத்து நின்று கரம் கூப்பி அந்தப் பெண்ணுக்கு மரியாதை செலுத்தினோம்.

உயிர் பிரிந்தாலும், உறுப்பு களைத் கொடையளித்து பிறருக்கு வாழ்வளிப்பவர்களின் தியா கத்துக்கு ஈடாக எதையும் தர முடியாது. குறைந்தபட்சம் இந்த கவுரவத்தையாவது அளிக்க வேண்டும் என எண்ணி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இத் தகைய நடைமுறையை பின்பற்றி வருகிறோம் என்றார் அவர்.

No comments:

Post a Comment