மதுரையும் - கோத்ராவும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 2, 2023

மதுரையும் - கோத்ராவும்

அன்பைப் பொழிந்த திராவிட மாடலும் - கொடூர முகத்தைக் காட்டிய ஆரிய மாடலும்

உத்தரப்பிரதேசத்தில் இருந்து 17.08.2023 அன்று ஆன்மீக சுற்றுலா ரயில் புறப்படுகிறது. இந்த ரயில் 26.08.2023 அன்று அதிகாலை மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தது. அங்கிருந்து சிறிது தூரமாக ஆன்மீக சுற்றுலாவிற்காக வந்த இந்த இணைப்பு ரயில் பெட்டி தனியாக நிற்க வைக்கப்பட்டிருந்தது. 

ரயில் பெட்டியில்  சட்டவிரோதமாக எரிபொருட்கள். இதில் 4 எரிவாயு உருளைகள் மற்றும் ஒரு கழிப்பறை. முழுக்க மரக்கட்டைகள் போன்றவைகளை சேகரித்து வைத்துள்ளார்கள். இவை ரயிலில் உணவு சமைக்கவாம்.

நிகழ்வு நடந்த அன்று அதிகாலை தேநீர் தயாரிக்க சிலிண்டரைப் பற்ற வைத்துள்ளனர். திடீரென வெடித்து முழு ரயிலும் தீப்பிடித்து எரிந்தது. தனியாக நிறுத்தப்பட்ட ரயில்பெட்டி ஆகையால் 9 உயிர்களோடு நின்றுபோனது.

தீ விபத்து நடந்த உடன் துரிதமாக மீட்புப் பணிகள் நடந்து, உயிர்ப் பிழைத்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுப் பத்திரமாகச் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டனர். மீட்புப் பணியில் ஈடுபட்ட முதல்நிலை ரயில்வே ஊழியர் முதல், ரயில்வே அதிகாரிகள், விபத்தைப் பார்த்த பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல வந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் மற்றும் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், மூர்த்தி என எல்லோருமே நடந்தது ஒரு விபத்து, அது எப்படி எதனால் நடந்தது, வருங்காலத்தில் எப்படி அதைத் தடுக்கலாம் என்பது குறித்து ஊடகங்களுடன் பேசினர்.  யாரும் யார் மீதும் வீண் பழி போடவில்லை; வதந்தி கிளப்பவில்லை; மதவெறி இனவெறியை கக்கவில்லை. எந்த வன்முறை கலவரமும், ஏன் சின்ன பதற்றமோ பரபரப்போ கூட ஏற்படவில்லை. ஒரு விபத்து - அதில் சிக்கிய மக்கள் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு சமூகத்திலும் பதற்றம் ஏற்படாவண்ணம் செயல்பட்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், அமைச்சர்கள் பி.டிஆர்.பழனிவேல் ராஜன், மூர்த்தி உள்ளிட்டவர்களின் பணி மனித நேயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

காலச் சக்கரத்தை அப்படியே பின்னோக்கி கொண்டு செல்லுங்கள் 

அதே உத்திரப் பிரதேசத்தில் இருந்து குஜராத் நோக்கி ரயில் ஒன்று புறப்படுகிறது. அதுவும் ஆன்மீக ரயில் தான், ராமர்கோவிலை இடிக்க பயிற்சி எடுத்த ராமபக்தரக்ள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் கரசேவகர்கள் அந்த ரயிலில் பயணித்தனர். மதுரைக்கு வந்த ரயிலைப் போலவே சுடச்சுட டீ போட, சப்பாத்தி போட்டெடுக்க, ரயில்வே விதிகளை மீறி, எடுத்து வரப்பட்ட அடுப்புகள் இருந்தன.

அந்த ரயில் குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் நிற்கும் போது அதிகாலை வேளையில் சாப்பாடு செய்ய அடுப்பைப் பற்ற வைத்துள்ளார்கள் அடுப்புகளும் திடீரென்று வெடிக்க, தீவிபத்து நடந்தது.

கிட்டத்தட்ட பெட்டியில் இருந்த 58 பேரும் இறந்தனர்.

ஒரு மணி நேரத்திற்குள் பிளாட்பாரத்தில் பழம் விற்றுக் கொண்டிருந்த இஸ்லாமிய சிறு வணிகர்கள் தான் ரயில் பெட்டிக்குத் தீ வைத்ததாக வதந்தீ மாநிலம் முழுக்கப் பரப்பப்பட்டது.

அப்போது ஹிந்து அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் பிரவின் தொகாடியா போன்றோர்  "தீ வைத்தவர்களுக்குச்" சரியான பாடம் புகட்ட வேண்டும் என வன்மம் கொப்பளிக்கப் பேசினர்.

 அடுத்த மூன்று நாள்களுக்கு, காவல் துறை வேடிக்கைப் பார்க்க, ஹிந்துத்வ அமைப்புகளின் முற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்த தலைவர்கள் திட்டம் போட்டுக் கொடுக்க, பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்த அடியாட்கள் வன்முறை வெறியாட்டம் போட்டார்கள்; வெட்டினார்கள்; கொளுத்தினார்கள்; பாலியல் வன்புணர்வு செய்தார்கள்;

ஈவு இரக்கமில்லாமல், இரண்டாயிரம் முதல் நாலாயிரம் பேர் வரை கொன்றார்கள்; சிக்கிய சிறுவர்கள், கைக் குழந்தைகள், கர்ப்பிணிகள், அவர்கள் சுமந்த கருக்கள் வரை யாரையும் தப்பவிடாது சிதைத்தார்கள்; பல நூறாயிரம் பேரின் வாழ்வாதாரத்தை அழித்தார்கள். ஆனாலும், கால ஓட்டத்தில் ஏறக்குறைய எல்லா குற்றவாளிகளும் தப்பினர், பார்ப்பனர் என்பதால் விடுதலை செய்யப்பட்ட கூட்டுப் பலாத்கார கொலைக் குற்றவாளிகள் உட்பட.

2002ஆம் ஆண்டு குஜராத் - ஹிந்துத்துவ பூமி. சனாதன மாடல் ஆட்சி.  

மதுரையில் நடந்த விபத்து - இடம் தமிழ் நாடு. பெரியார் பூமி. திராவிட மாடல் ஆட்சி.

2002ஆம் ஆண்டும் அங்குள்ள அரசு தமிழ்நாட்டைப் போன்றே இந்த விபத்தை கையாண்டிருந்தால் இந்த நாட்டின் நிலையே வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் அன்றைய முதலமைச்சராக குஜராத்தில் இருந்த மோடிக்கு டில்லியில், அடைந்த பதவிப் பயணத்திற்கான முதல் படியாகத்தான் இந்த விபத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.


No comments:

Post a Comment