குலத்தொழிலை ஊக்குவிக்கும் ‘விஸ்வகர்மா யோஜனா’என்ற ஒன்றிய அரசின் ச(சா)தித் திட்டத்தை கண்டித்து அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 7, 2023

குலத்தொழிலை ஊக்குவிக்கும் ‘விஸ்வகர்மா யோஜனா’என்ற ஒன்றிய அரசின் ச(சா)தித் திட்டத்தை கண்டித்து அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


சென்னை, செப். 7- குலத்தொழிலை ஊக்குவிக்கும் ‘விஸ்வகர்மா யோஜனா’என்ற ஒன்றிய அரசின்ச(சா)தித்   திட்டத்தை கண்டித்து அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று (6.9.2023) மாலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். திராவிடர் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப்பொதுச் செயலளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தலைமைக் கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாவட்ட கழகத் தலைவர்கள் திருவொற்றியூர் வெ.மு.மோகன், தாம்பரம் ப.முத்தையன், ஆவடி வெ.கார்வேந்தன், புழல் த.ஆனந்தன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், வடசென்னை வழக்குரைஞர் தளபதி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அனைவரையும் வரவேற்று ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார்.

கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேர வைத் தலைவர் வெங்கிடு பழனி, அகில இந்திய பிற்படுத்தப் பட்ட நல சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி, திமுக மருத்துவரணி மாநில செயலாளர், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன்,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.எம்.நிஜாமுத்தீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன். குமார், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலா ளர் கே. பாலகிருஷ்ணன், திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர், மக்களவை உறுப்பினர் ஆ.இராசா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலை வர் கே.எஸ். அழகிரி ஆகியோர்  கண்டன உரையாற்றினார்கள்.

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரை - ஆர்ப்பாட்ட கண்டன சிறப்புரை ஆற்றினார்.

தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர்  இரா.வில்வ நாதன்  நன்றி கூறினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக வழக்குரை ஞரணி தலைவர் த.வீரசேகரன், சி.வெற்றிசெல்வி, பெரியார் செல்வி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, இறைவி, பூவை செல்வி, பசும்பொன், த.மரகதமணி, மெர்சி, பண்பொளி, மாட்சி, தேன்மொழி, வி.வளர்மதி, பி.அஜந்தா, தங்க.தன லட்சுமி, நூர்ஜகான், வெண்ணிலா, தொண்டறம், மாவட்டச் செயலாளர்கள் தாம்பரம் கோ.நாத்திகன், தென்சென்னை செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை புரசை சு.அன்புசெல்வன், திருவொற்றியூர் தே.ஒளிவண்ணன், ஆவடி க.இளவரசன், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், மு.இரா.மாணிக்கம், தமிழக மூதறிஞர் குழு பொருளாளர் த.கு.திவாகரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், க.கலைமணி, பொழிசை கண்ணன், நா.பார்த்திபன், மகேந்திரன், சண்முகப்ரியன், தாம்பரம் சுரேஷ், வழக்குரைஞர் துரை அருண், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், அ.கருப்பையா, கு.வைத்தியலிங்கம், சந்திர சேகர், தனசேகர், கண்ணதாசன், சீனிவாசன், சேலையூர் பழனிசாமி, நாகை சி.காமராஜ், மு.கலைவாணன், கூடுவாஞ்சேரி மா.ராசு, மதிவாணன், பெரம்பூர் கோபாலகிருஷ்ணன், கு.ஜீவா, கி.இராமலிங்கம், அயன்புரம் துரைராஜ், மயிலை சேதுராமன், சூளைமேடு கோ.வீ.ராகவன், இராமச்சந்திரன், அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ்ச்செல்வன், பாலமுரளி, விடுதலைநகர் ஜெயராமன், தமிழினியன், சீர்காழி ராமண்ணா,  கு.சோமசுந்தரம், தாராசுரம் இளங்கோவன், பாண்டு, கொடுங் கையூர் தங்கமணி, ஆவடி அய்.சரவணன், வஜ்ரவேலு, சுந்தரராஜன், ஜெயராமன், தமிழ்மணி, பெரியார்மாணாக்கன், இரணியன், முத்தழகு, பழ.சேரலாதன், மணிமாறன், அசன் அலியார், வேல்முருகன், பகுத்தறிவு, சந்திரபாபு, இரா.கோபால், ராஜேந்திரன், முகப்பேர் முரளி, அ.வெ.நடராசன், சங்கர், இரவீந்திரன், தங்க.சரவணன், இரா.பிரபாகரன், இரா.மாரி முத்து, மு.சேகர், ச.மாரியப்பன், மா.சண்முகலட்சுமி, கோ.அரி கரன், அய்ஸ் அவுஸ் உதயா

திமுக பொறுப்பாளர்கள் சென்னை மேற்கு மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, ஆயிரம் விளக்கு மேற்கு பகுதி செயலாளர் எம்.கே.வினோத் வேலாயுதம், திமுகழக தலைமை செயற்குழு உறுப்பினர் நுங்கை வி.எஸ்.ராஜ், கிழக்கு பகுதி செயலாளர் மா.பா.அன்புதுரை,  தடா சக்ரவர்த்தி மற்றும் திமுக பல்வேறு அணிகளின் பொறுப் பாளர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஎம், காங்கிரசு, மதிமுக, இந்திய யூனியன் முசுலீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை, தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களின் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கண்டன ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment