அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 27, 2023

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

 நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஒலித்த எதிர்ப்புக்குரல்
தற்போது வடமாநிலங்களிலும் தொடங்கி உள்ளது

கிருஷ்ணகிரி, செப். 27- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கட்சியின் மூத்த கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி சென்னை சாலையில் உள்ள தேவராஜ் மகாலில் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு திராவிட முன் னேற்றக் கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளர் தே. மதி யழகன் எம்.எல். ஏ., தலைமை தாங்கினார், தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஒய். பிரகாஷ் எம்.எல்.ஏ., ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தமிழக இளை ஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 1750 பேருக்கு தலா பத்தாயிரம் பொற்கிழி வழங் கினார். விழாவில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது:,

திராவிட முன்னேற்றக் கழ கத்தின் மூத்த முன்னோடிக ளுக்கு 1750 பேருக்கு பத்தாயிரம் பொற்கிழி வழங்க வாய்ப் பளித்த மாவட்ட கழகச் செய லாளர் தே.மதியழகன் எம்.எல்.ஏ.வுக்கு  எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இளைஞரணி செயலாளராக நான் பொறுப்பேற்ற பிறகு 2019 ஆம் ஆண்டு இந்த மாவட் டத்திற்கு வருகை தந்தேன், அப்போது மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஒய்.பிர காஷ் என்னை அழைத்து 500 பேருக்கு தலா ரூ5000 பொற் கிழியை வழங்கச் செய்தார்.  தற்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் 1750 பேருக்கு பொற்கிழி வழங்கப்பட்டுள் ளது. இந்த தொகை மிகப்பெரிய தொகையாகும் இதற்காக மாவட்ட செயலாளர் தே.மதி யழகன் எம்.எல்.ஏ., அவர்க ளுக்கு எனது மனமார்ந்த நன் றியை தெரிவித்துக் கொள்கி றேன். 

தொழிற்சாலைகள்

கலைஞரின் ஆட்சியில் ஓசூரில் சிப்காட் 1, 2, 3 ஆகிய தொழிற்சாலைகள் தொடங் கப்பட்டது,  இப்போது இந்த மாவட்டம் பெங்களூருக்கு இணையாக வளர்ச்சி பெற்று உள்ளது. இந்த மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல்கூட்டு குடிநீர் தந்த பெருமை நமது முதலமைச்சரை சாரும் கழகத் தின் மூத்த முன்னோடிகளாகிய நீங்கள் இந்த கழகத்தின் வேர் கள் ஆகும். நாங்கள் வேர்களை சிந்திக்கிறோம் நீங்கள் ரத் தத்தை சிந்தி கட்சியை வளர்த் தீர்கள். உங்களை கவுரவிப்பதில் நான் பெருமை அடைகிறேன். திமுக இளைஞரணி அறக்கட் டளை சார்பில் மருத்துவ உதவியாக ரூ50 லட்சம் வழங் கப்பட்டுள்ளது. 30 மாவட்டங் களில் மூத்த நிர்வாகிகளுக்கு ரூ 40 கோடியில் பொற்கிழி வழங் கப்பட்டுள்ளது. 

மூத்த முன்னோடிகளை...

இந்தியாவிலேயே கட்சி யின் மூத்த முன்னோடிகளை கவுரவிக்கும் ஒரே இயக்கம் திமுக தான்.  சேலத்தில் வரு கின்ற டிசம்பர் 17ஆம் தேதி மாநில இளைஞரணி மாநாடு நடக்கிறது. நான் மாநில செயலாளராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் மாநில மாநாடு ஆகும். அங்கு வந்து கட்சியின் மூத்த முன்னோடிகள் வாழ்த்த வேண்டும். அதற்காக தான் நான் வந்துள்ளேன். தற்பொழுது ஒரு கட்சி மாநாடு நடத்தியது. அவர்கள் எப்படி மாநாடு நடத்தினார்கள் என் பது அனைவருக்கும் தெரியும். அதே நாளில் திமுக நீட் விலக் குக்காக போராட்டம் நடத்தி யது. நீட் தேர்வால் அனிதா முதல் ஜெகதீசன் வரையில் 21 மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட கொண்டனர். இதில் ஜெக தீசன் மறைவால் அவரது தந் தையும் தற்கொலை செய்தார். நீட் விலக்கு அளித்தால் தான் நிம்மதி கிடைக்கும். நீட் தேர் வுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஒலித்த எதிர்ப்பு குரல் தற் போது வட மாநிலங்களிலும் தொடங்கி உள்ளது. தற்போது இந்த விழாவில் பொற்கிழி வழங்குவதை எனது தாத்தா பாட்டிக்கு நான் செய்ய கூடிய கடமையாக எண்ணுகிறேன். 

எண்ணற்ற திட்டங்கள்

முதலமைச்சர் மு,க.ஸ்டா லின் சொன்ன திட்டங்களை நிறைவேற்றியதோடு மக்க ளுக்கு அறிவிக்காத எண்ணற்ற திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளார். நான் கலைஞரை பார்த்து உள்ளேன். அண்ணா, பெரியாரை நான் பார்க்க வில்லை. அவர்களின் வடிவில் நான் உங்களை பார்க்கிறேன். மூத்த நிர்வாகிகளான நீங்கள் இன்றி வெற்றி இல்லை. நீங்கள் இன்றி கழகமும் இல்லை. இவ் வாறு அவர் கூறினார். 

செயல் வீரர்கள் கூட்டம்                              

ஒருங்கிணைந்த கிருஷ்ண கிரி மாவட்ட தி.மு.க.  இளை ஞரணி செயல் வீரர்கள் கூட் டம் தேவராஜ் மஹால் வளா கத்தில் நடைபெற்றது. கிருஷ் ணகிரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் தே.மதியழகன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஒய் பிரகாஷ் எம்.எல்.ஏ., ஆகியோர் தலைமை தாங்கினார். தமிழ்நாட்டு அமைச்சர்கள் அர.சக்கர பாணி, எம்.ஆர். கே.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச் சரும்  திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கூட்டத்தில் அமைச்சர் உதய நிதி பேசியதாவது:, கிருஷ்ண கிரி கிழக்கு மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் சேலத்தில் நடைபெற உள்ள மாநில மாநாட்டிற்காக 10 லட்சத்து 10 ஆயிரத்திற்கான நிதியை இளைஞரணி செயலா ளர் அமைச்சர் உதயநிதியிடம் வழங்கினார்கள். இந்த கூட்டத் தில் ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்த், மேனாள் எம்பிக்கள் இ. ஜி. சுகவனம், வெற்றிச்செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் உறுப்பினர்கள்  தி.செங் குட்டுவன், பி.முருகன், நகரச் செயலாளர் எஸ்.கே. நவாப், நகர மன்ற தலைவர் பரிதா நவாப், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஈரோடு பிரகாஷ், ஓசூர் சீனிவாசன், மாவட்ட அவை தலைவர் நாக ராஜ், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசி மூர்த்தி, பொருளாளர் கதிர வன், ஒன்றிய செயலாளர்கள் வி.ஜி. ராஜேந்திரன், சாந்த மூர்த்தி, க.மகேந்திரன், தேங் காய் சி.சுப்பிரமணி, அறிஞர்,  தலைமை செயற்குழு உறுப்பி னர்கள் கிருபாகரன், செந்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லாம் ரகுமான் ஷரீப், நாகராஜ், சித்ரா சந்திரசேகர், பாலன், கோதண்டன், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி .சி .ஆர். தினேஷ் ராஜன், துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், சத்தியமூர்த்தி, கே. எஸ்.சங்கர், லயோலா ராஜசேகர், சரவ ணன், சங்கர் உள்பட கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும் பெருந் திரளாக கலந்து கொண் டனர். முன்னதாக கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகிலிருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மாவட்ட கழகச் செயலாளர் தே.மதியழகன் எம்.எல்.ஏ.,தலைமையில் சாலையில் இருபுறங்களிலும் தாரைதபட்டை முழங்க உற் சாகமாக அனைத்து அணிக ளின் சார்பில் வரவேற்று தேவ ராஜ் மகால் வரை அழைத்து சென்றனர். கிருஷ்ணகிரி நகரமே விழா கோலம் பூண்டிருந்தது.

No comments:

Post a Comment