நெருக்கடி நிலை காலத்திலே... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 16, 2023

நெருக்கடி நிலை காலத்திலே...

1975 ஜூன் 26ஆம் தேதி அன்று இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. அதனை எதிர்த்து 24 மணி நேரத்திற்குள் தி.மு.க. செயற்குழுவைக் கூட்டி (75 உறுப்பினர்களில் 63 பேர் விரைந்து வந்து பங்கேற்றனர்). நெருக்கடி நிலையை எதிர்த்து - கண்டித்து இந்தியாவிலேயே தீர்மானம் நிறைவேற்றியது கலைஞர் தலைமையிலான திமுகவே!

1975 ஜூலை 6ஆம் தேதி சென்னை கடற்கரையில் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தது திமுக. அந்தக் கூட்டத்தில் அனைவரையும் 'எழுந்து நில்லுங்கள்!' என்று முதலமைச்சர் கலைஞர் வேண்டுகோள் விடுத்தார். அனைவரும் எழுந்து நின்றனர்.

நான் சொல்லுவதை அப்படியே சொல்லுங்கள் என்றார் கலைஞர். அவ்வாறே சொல்லிச் சூளுரை ஏற்றனர் 5 இலட்சம் மக்களும்.

“எந்த நிலையிலும் - எத்தகைய நெருக்கடி ஏற்பட்டாலும் - இந்தியாவில் மக்களாட்சி முறைக்குக் கேடு ஏற்படாமல் - பாதுகாப்பதற்குத் தயங்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்கிறோம்!

தேசத் தலைவர்கள் விடுதலை பத்திரிகைகளின் நியாயமான உரிமைகள் - இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்று - இந்தியப் பிரதமர் அவர்களை -  தமிழ்நாட்டு மக்களின் இந்த மாபெரும் கூட்டம் கேட்டுக் கொள்கிறது வாழ்க  - ஜனநாயகம்!"

இந்தச் சூளுரையுடன் மக்கள் கலைந்து சென்றனர்.

(கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி’ இரண்டாம் பாகம் - பக்கம் 500)


No comments:

Post a Comment