இதுதான் பக்தியோ! திண்டுக்கல்லில் தடையை மீறி பிள்ளையார் ஊர்வலமாம்! இந்து முன்னணியினர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 19, 2023

இதுதான் பக்தியோ! திண்டுக்கல்லில் தடையை மீறி பிள்ளையார் ஊர்வலமாம்! இந்து முன்னணியினர் கைது

திண்டுக்கல், செப்.19 - திண்டுக்கல் லில், தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்திய இந்து முன்னணியினர் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

தடையை மீறி ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று (18.9.2023) திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில், பல் வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடை பெற்றது.

திண்டுக்கல் குடைபாறைப்பட் டியில் பொதுமக்கள் சார்பில், ஒவ் வொரு ஆண்டும் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி வருகின்றனர். 

ஆனால், இந்து அமைப்புகள் சார்பில், அங்கு விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவதற்கு காவல் துறையினர் தடை விதித்து உள் ளனர்.

ஆனால் இந்து முன்னணியினர் காவல் துறையின் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து திண்டுக்கல் நகர காவல் துறையின் துணை கண் காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான காவ லர்கள்அங்கு குவிக்கப்பட்டனர்.

சிலை பறிமுதல்

இதற்கிடையே இந்து முன்ன ணியினர் மேளதாளம் முழங்க ஒரு விநாயகர் சிலையை கொண்டு வந்து அங்குள்ள கற்பக விநாயகர் கோவிலில் வைத்தனர். பின்னர் அங்கு பூஜைகள் நடத்தப்பட்டு, கோவிலில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது.

இந்த ஊர்வலம் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலைக்கு வந்த தும் காவல் துறையினர் ஊர்வ லத்தை தடுத்து நிறுத்தினர்.

மேலும் தடையை மீறி ஊர்வலமாக கொண்டு வந்த விநாயகர் சிலையை காவல் துறையினர் பறிமுதல் செய் தனர். இதற்கு இந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

38 பேர் கைது

இதனையடுத்து தடையை மீறி ஊர்வலம் சென்றதாக கோட்ட செயலாளர் சங்கர் கணேஷ், மாவட்ட செயலாளர் வீரதிரு மூர்த்தி, நகர தலைவர் ஞானசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் உள்பட 38 பேரை காவல் துறையினர் கைது செய்து திண்டுக்கல்லில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

அதேநேரத்தில், இந்து முன் னணியினரிடம் இருந்து பறிமுதல் செய்த விநாயகர் சிலையை காவல் துறையினர் சரக்கு வாகனத்தில் கொண்டு சென்று திண்டுக்கல் கோட்டைக்குளத்தில் கரைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment