அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி - தமிழ்நாட்டையும் கேரளாவையும் ஹிந்தி ஒருங்கிணைக்கிறதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 15, 2023

அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி - தமிழ்நாட்டையும் கேரளாவையும் ஹிந்தி ஒருங்கிணைக்கிறதா?

சென்னை, செப்.15 ஹிந்தி தினம் குறித்த உள்துறை அமைச் சர் அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். ஹிந்தி மொழி குறித்த அமித்ஷாவின் கருத்துக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டு துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில், "ஹிந்தி தான் நாட்டு மக்களை ஒன்றி ணைக்கிறது - பிராந்திய மொழி களுக்கு அதிகாரமளிக்கிறது" என்று வழக்கம் போல தனது ஹிந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார். ஹிந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து. தமிழ்நாட்டில் தமிழ் - கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் ஹிந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக் கிறது? நான்கைந்து மாநிலங் களில் பேசப்படும் ஹிந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றி யத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. ஹிந் தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என உதயநிதி தெரிவித்துள்ளார். 


No comments:

Post a Comment