விநாயகர் சிலைகளை சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் நீர் நிலைகளில் கரைக்கக் கூடாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 5, 2023

விநாயகர் சிலைகளை சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் நீர் நிலைகளில் கரைக்கக் கூடாது

மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

சென்னை, செப். 5- விநாயகர் சிலை களை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், களிமண் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் மட்டுமே சிலைகளை உருவாக்க வேண்டும். அப்படி உருவாக் கப்பட்ட சிலைகளை மட்டுமே நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்ப தற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ் டிக் மற்றும் தெர்மாகோல் கலவையால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருட்களால் உண் டான சிலைகளை மட்டுமே தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மட்காத ரசாயன சாயம் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலையின் மீது எனா மல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படை யாகக் கொண்ட வண்ண பூச்சுகளை பயன் படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச் சூழ லுக்கு உகந்த பொருட்களை மட்டுமே பயன் படுத்தி சிலைகளை அழகுப்படுத்த வேண் டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதி முறைகளின்படி மாவட்ட நிர்வாகத் தினர் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment