ஆன்லைன் மோசடி அதிகரிப்பு டிஜிபி எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 24, 2023

ஆன்லைன் மோசடி அதிகரிப்பு டிஜிபி எச்சரிக்கை

சென்னை,செப்.24  சைபர் க்ரைம் கூடுதல் காவல்துறை இயக்குநர் சஞ்சய் குமார்  வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:   வாட்ஸ்அப் மூலம்  தொடர்பு கொள்ளும் மோசடி நபர்கள், தங்களை டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத் தின் எச்ஆர் என அறிமுகப்படுத்தி கொள்கின்றனர். பின்னர், அவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு வணிகங்கள், கூகுள் மேப், உள்ளிட்ட பல்வேறு இணையதள முகவரியில் மதிப்புரைகள், கருத்துகளை வழங்குவது போன்ற பணிகளை வழங்குகிறார்கள். அதன்மூலம், ஒரு நாளைக்கு ரூ.450 முதல் ரூ.11,000 வரை சம்பாதிக்கலாம் என கூறி கவர்ந்திழுக்கிறார்கள்.

 எனவே, பொதுமக்கள் வாட்ஸ் அப், டெலிகிராம், முகநூல் மெசஞ்சர் மூலம் பெறும்சலுகைகள், வேலைவாய்ப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற புகார்களுக்கு ‘1930’ என்ற எண்ணிலும், www.cybercrime.gov.in என்ற இணைய தளத்திலும் புகாரை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment