எம்.பி.பி.எஸ். படிக்க மனநல பாதிப்பு தடையல்ல உச்சநீதிமன்றத்தில் தேசிய மருத்துவக் கவுன்சில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 14, 2023

எம்.பி.பி.எஸ். படிக்க மனநல பாதிப்பு தடையல்ல உச்சநீதிமன்றத்தில் தேசிய மருத்துவக் கவுன்சில் தகவல்

புதுடில்லி,செப்.14 - ‘இளநிலை மருத்துவப் படிப்பை (எம்பிபிஎஸ்) மேற்கொள்ள மனநல பாதிப்பு தடை யல்ல. வரும் காலங்களில் இவர் களுக்கும் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு அடிப்படையில் இடஒதுக் கீடு அளிப்பது குறித்து பரிசீலிக்கப் படும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் தேசிய மருத்துவக் கவுன்சில் (என்எம்சி) தெரிவித்தது.

சிறப்பு கற்றல் குறைபாடு, மன இறுக்கம், மன நல பாதிப்பு உடைய மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் சேர்க் கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு அடிப்படையில் இடஒதுக் கீடு வழங்க உத்தரவிடக் கோரி, மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை மறுக்கப் பட்ட விஷால் குப்தா என்பவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு தொடர்பாக நிபுணர் குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்து உரிய நடைமுறையை வகுக் குமாறு கடந்த மே 18-ஆம் தேதி என்எம்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு 12.9.2023 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது என்எம்சி தரப் பில் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது.

அதில், ‘இந்த விவகாரம் தொடர் பாக 8 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு ஆலோசனை மேற்கொண்டு பரிந்து ரைகளை சமர்ப்பித்துள்ளது. அதன் படி, மருத்துவப் படிப்பில் சேர மனநல பாதிப்பு ஒரு தடையாக இருக்க முடியாது. நீட் தேர்வு அடிப் படையில் அவர்கள் சேர்க்கை பெற முடியும்.

தற்போதைய நடைமுறைப்படி, இந்த பாதிப்பு உடையவர்களை மாற்றுத் திறனாளிகள் ஒதுக்கீட்டின் கீழ் கொண்டுவருவது குறித்து தீர்மானிக்கப்படவில்லை. 

இருந்தபோதும், வரும் நாள்களில் இவர்களுக்கான ஒதுக்கீடு குறித்து சிறந்த நடைமுறை வகுக்கப்படும்’ என்று என்எம்சி தெரிவித்தது.

என்எம்சி தரப்பு வழக்குரைஞர் இந்த அறிக்கையை நீதிபதிகள் அமர்வில் சமர்ப்பித்து, வாதிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், 4 வாரங்களுக்குப் பிறகு இந்த விவ காரம் கருத்தில் கொள்ளப்படும் என்று கூறி, விசாரணையை ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment