நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் பகுதியில் இருந்து அரசியல் முழக்கம்: காங்கிரஸ் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 25, 2023

நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் பகுதியில் இருந்து அரசியல் முழக்கம்: காங்கிரஸ் கண்டனம்

புதுடில்லி, செப். 25- நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அரசியல் முழக்கங்கள் எழுப்பப்பட்ட விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவைத்தலைவர் ஜெக்தீப் தன் கருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் அனுப்பி உள்ளது. 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18-ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடந்தது. இதில் 2ஆ-வது நாளான 19-ஆம் தேதி முதல் புதிய நாடாளுமன்றத்தில் அலுவல் கள் நடந்தன. இந்த அவை நிகழ் வுகளை பார்வையிடுவதற்காக ஏராளமான பொதுமக்கள் நாடாளுமன்றத்துக்கு வந்திருந் தனர். அவர்கள் இரு அவைக ளின் பார்வையாளர் மாடங்க ளில் அமர்ந்திருந்தனர். கடந்த 21-ஆம் தேதி இவ்வாறு மாநி லங்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்த ஏராளமா னோர், அவை நடந்து கொண்டிருந்தபோது அரசியல் ரீதியாக முழக்கங்களை எழுப்பினர். இந்த விவகாரத்துக்கு கடும் கண் டனம் தெரிவித்துள்ள காங்கி ரஸ் கட்சி, இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவைத்தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜெக்தீப் தன்கருக்கு கடிதம் எழுதி யுள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை தலைமை கொறடாவுமான ஜெய்ராம் ரமேஷ் அனுப்பியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது:-   மாநிலங் களவையில் கடந்த 21ஆம் தேதி பார்வையாளர் மாடத்தில் இருந்த ஒரு பிரிவினர் அரசியல் முழக்கங்களை எழுப்பிய அதிர்ச் சிகரமான சம்பவம், மிகவும் கவலையையும், பெருத்த ஏமாற் றத்தையும் அளிக்கிறது. இந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத் தியது மட்டுமின்றி, சபைக்குள் சட்ட விதிமுறைகளை அமல் படுத்துவது குறித்தும் கடுமை யான கேள்விகளை எழுப்பியுள் ளது. மாநிலங்களவையின் கடு மையான பாதுகாப்பு நடவடிக் கைகள் மற்றும் அவை பாது காவலர்களின் விடாமுயற்சி இருந்தபோதிலும், ஒரு குழு வினர் அரசியல் முழக்கங்களில் ஈடுபட்டவாறே இருந்தனர்.

 நாடாளுமன்ற அமர்வுகளின் போது பார்வையாளர் மாடங் களில் அமரும் தனிநபர்களின் நடத்தைகளுக்கான விதி 264-அய் அப்பட்டமாக மீறும் வகையில் இந்த சம்பவம் அமைந்து உள்ளது. பார்வையாளர் மாடத் தில் இருந்த 50க்கும் மேற்பட்ட பேர் முழக்கமிட முடிந்திருப்பது பெரும் கவலையளிக்கும் விஷயம் ஆகும். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மாநிலங்களவைக்குள் இத்தகைய பாதுகாப்பு மற்றும் விதி மீறல் எப்படி சாத்திய மானது? என்பதை கண்டறிய, இது குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டியது அவசியம். இந்த இடையூறுகளை ஏற்படுத்திய நபர்கள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். இந்த சம்பவங்களுக்கு ஆதரவாக இருந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளு மன்றத்தின் புனிதத்தை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைப் போல சிவசேனா கட்சியும் இந்த விவகாரத்தில் ஜெக்தீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளது.

No comments:

Post a Comment