இந்திய மொழிகளை ஹிந்தி ஒருங்கிணைக்கிறதாம் சொல்லுகிறார் அமித்ஷா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 15, 2023

இந்திய மொழிகளை ஹிந்தி ஒருங்கிணைக்கிறதாம் சொல்லுகிறார் அமித்ஷா

புதுடில்லி, செப் 15 இந்திய மொழி களை ஹிந்தி ஒருங் கிணைப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழா ரம் சூட்டியுள்ளார். 

ஹிந்தி மொழி தினம் நேற்று (14.9.2023) கொண் டாடப்பட்டது. இதை யொட்டி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா  செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:- இந்தியா, பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடாக இருந்து வருகிறது. உலகின் மிகப் பெரிய இந்த ஜனநாயக நாட்டில் மொழிகளின் பன்முகத்தன் மையை ஹிந்தி ஒருங்கிணைக் கிறது. நாட்டின் அனைத்து மொழிகளையும் வலுப்படுத் தினால் மட்டுமே வலிமையான நாடு உருவாகும். ஹிந்தி ஒரு போதும் மற்ற இந்திய மொழி களுடன் போட்டி போடவில்லை. ஹிந்தி ஒரு ஜனநாயக மொழியாக இருந்து வருகிறது. இது பல்வேறு ஹிந்திய மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள் மற்றும் பல உலகளாவிய மொழிகளையும் ஊக்குவித் துள்ளது. அவற்றின் சொற் களஞ்சியம், வாக்கியங்கள் மற்றும் இலக்கண விதிகளை ஏற் றுக் கொண்டு உள்ளது. விடுதலை போராட்டத்தின் கடினமான காலங்களில் நாட்டை ஒருங்கி ணைக்க ஹிந்தி மொழி மிகப்பெரிய பங்காற்றி உள்ளது. பல மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளைக் கொண்ட இந்தியா வில் ஒற்றுமை உணர்வைத் தூண்டியது.

ஹிந்தி, தகவல்தொடர்பு மொழியாக, சுதந்திரப் போராட் டத்தை கிழக்கிலி ருந்து மேற் காகவும், வடக்கிலி ருந்து தெற்காக வும் முன்னெ டுத்துச் சென்றதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் தேசிய மற்றும் உலகளாவிய மன்றங்களில் இந்திய மொழி களுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைத்துள்ளன. நவீன தொழில்நுட்பத் தின் மூலம் ஹிந்திய மொழி களை, பொது நிர்வாகம், கல்வி மற்றும் அறிவியல் பயன்பாட்டு மொழிகளாக நிலை நிறுத்துவதற்கு உள் துறை அமைச்சகத்தின் அதி காரப்பூர்வ மொழித்துறை, தொடர்ச்சியான முயற்சி களை மேற்கொண்டு வரு கிறது. பிரதமரின் வழிகாட்டுத லின் கீழ், இந்திய மொழிகளில் அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத் துவதன் மூலம் மக்கள் நலத் திட்டங்கள் திறம்பட செயல்படுத் தப்பட்டு வருகின் றன. அலுவலக பணிகளில் எளிமையான மற்றும் தெளிவான ஹிந்தி வார்த்தை களைப் பயன்படுத்த வேண்டும் என் பது எனது கருத்து. அய்.நா.வில் ஹிந்தி பயன்பாட்டை ஊக்குவிக்க இந்தியா முயற்சி களை எடுத்துள்ளது. இவ் வாறு அமித்ஷா கூறியுள்ளார்.


No comments:

Post a Comment