அரசு அலுவலகமா? ஆர்.எஸ்.எஸ். கூடாரமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 25, 2023

அரசு அலுவலகமா? ஆர்.எஸ்.எஸ். கூடாரமா?

அரசு அலுவலகங்களில் வழிபாட்டுக் கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது என்கிற அரசாணையை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது பழனி நகர்மன்றம்.

பழனியில் அண்ணாமலை நடைபயணம் வந்த நேரத்தில் பழனி நகராட்சி அலுவலகத்தில் பணி யாற்றும் பணியாளர்களை வெளியே அனுப்பி கேட்டை அடைத்து வைத்து இரவு நேரத்தில் ஆக்கிர மிப்பில் உள்ள விநாயகர் சிலையை திருட்டுத்தனமாக புதுப்பித்துக் கொண்டிருக் கிறார்கள்.

அரசு அலுவலகங்களுக்குள் மதம் சார்ந்த கட்டுமானங்கள் இருக்கக் கூடாது என்கிற அர சாணையை மீறி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென்கிற உத்தர வையும் மீறி, பழனி காவல் துணைக் கண்காணிப்பாளர் இனி கட்டுமானப் பணிகள் தொடராது என்றளித்த வாக்குறுதியையும் மீறி பழனி நகராட்சி அலுவலகத்தில் விநாயகர் சிலையை புதுப்பித்துக் கொண்டிருக் கிறார்கள் நகராட்சி அலுவலர்கள்.

இது தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது.

ஆக்கிரமிப்பை அகற்ற சொல்லிய மாவட்ட ஆட் சியர் உத்தரவை மீறிய செயலை வருவாய்த் துறையும், காவல் துறையும் தடுத்து நிறுத்துமா? இல்லை நகராட்சி யில் உள்ள மதவெறிக் கும்பலுக்கு துணை போகுமா?

அரசு அலுவலகமா? ஆர்.எஸ்.எஸ். கூடாரமா?

No comments:

Post a Comment