நினைவில் நிலைத்தவர் அண்ணா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 9, 2023

நினைவில் நிலைத்தவர் அண்ணா

"தம்பி!

மக்களிடம் செல்.

மக்களின் மத்தியில் வாழ்

அவர்களிடமிருந்து கற்றுக் கொள்.

அவர்களை நேசி.

அவர்களுக்கு என்ன தெரியுமோ

அதிலிருந்து தொடங்கு.

அவர்களிடம் என்ன இருக்கிறதோ

அதைக் கொண்டு நிர்மாணம் செய்"

என மக்களாட்சித் தத்துவத்தைப் பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் விளக்கியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

காஞ்சிபுரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, சிறந்த மாணவராக, எழுச்சிமிகு பேச்சாளராக, இலட்சோப லட்சம் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த எழுத்தாளராக, அரசியல் – பொருளாதார சமூகத்துறைகளில் புரட்சிக்கு வித்திட்ட பத்திரிகை ஆசிரியராக, சிறந்த நூலாசிரியராக, நாடக ஆசிரியராக, பண்பட்ட அரசியல்வாதியாக, உத்தமத் தலைவராக, ஒப்பற்ற வழிகாட்டியாக, சகலகலா வல்லவராக, நாடு போற்றும் முதலமைச்சராக விளங்கி ஓங்கு புகழ் எய்தியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் தாரக மந்திரத்தை நாட்டு மக்களுக்கு வழங்கி, அந்த உயர்ந்த இலட்சியங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். இந்திய அரசியலில், முதன் முதலில் குடும்பப் பாச உணர்வை ஊட்டியவர். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று உலகிற்கு உணர்த்திய உத்தமர்.

தான் எழுதிய திரைப்பட, கதை, வசனங்கள் மூலம் சுயமரியாதைக் கொள்கைகளையும், சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளையும் நாட்டு மக்களிடையே பரப்பிய நல்லாசான். ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகப் பலமுறை சிறை புகுந்த மாமேதை. தன் பேச்சாலும், எழுத்தாலும் சமுதாயத்தின் மூட நம்பிக்கைகளைச் சுட்டெரித்த பகுத்தறிவுப் பகலவன்.


No comments:

Post a Comment