பிரபல இயக்குநரும், சிறந்த நடிப்பாற்றல் உள்ளவரும், சீரிய பகுத்தறிவாளருமான நண்பர் தேனி மாரிமுத்து (வயது 56) அவர்கள் மறைந்தார் (8.9.2023) என்ற செய்தி அதிர்ச் சியைத் தந்தது!
அண்மையில் பிரபலமான ‘சன்’ டி.வி. ‘எதிர்நீச்சல்’ தொடரில் அவரது நடிப்பு சிறப்பானது. தனது பேட்டிகளில் அவர் ‘கடவுள்’ நம்பிக்கை, ஜோதிட நம்பிக்கையை மிகவும் அம்பலப் படுத்தி வெளிப்படையாகப் பேசியவர்.அதன் மூலம் பெரியார் கொள்கையாளர் என்பதை அறிந்தோம். அவருக்குப் ‘பெரியார் விருது’ அளிப்பதாக நாங்கள் முடிவு செய்து இருந்தோம்.
அவரது இழப்பு, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, கலை உலகத்திற்கும், பகுத்தறிவு உலகத்திற்கும் மிகப் பெரிய இழப்பு ஆகும்!
பெரியார் கொள்கை உறவு ஒருவர் மறைந்தார் என்பது அதிர்ச்சி செய்தி!
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர் கவிப் பேரரசு வைரமுத்து மற்றும் கலை உலகப் பகுத்தறிவாளர்களுக்கும் எமது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்.
8.9.2023

No comments:
Post a Comment