தஞ்சையில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 24, 2023

தஞ்சையில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பேட்டி

⭐அக்டோபர் 6: தஞ்சையில் முதலமைச்சருக்குப் பாராட்டு விழா 

⭐தஞ்சை காணாத அளவிற்கு சிறப்பாகவும் - எளிமையாகவும்  - கருத்தாழம் உள்ளதாகவும் அமையும்!

⭐'நீட்‘ தேர்வினால் ஒரு பயனும் இல்லை என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிட்டது!

ஆறு மாதத்தில் ஒன்றியத்தில் ஆட்சி மாறும் - காட்சி மாறும் - 'நீட்' ஜீரோ ஆகும்!

தஞ்சை, செப்.24  அக்டோபர் 6: தஞ்சையில் முதலமைச்சருக்குப் பாராட்டு விழா - தஞ்சை காணாத அளவிற்கு சிறப்பாகவும் - எளிமையாகவும்  - கருத்தாழம் உள்ளதாக வும் அமையும்! ‘நீட்' தேர்வினால் ஒரு பயனும் இல்லை என்று தெள்ளத் தெளி வாகத் தெரிந்துவிட்டது! ஆறு மாதத்தில் ஒன்றியத்தில் ஆட்சி மாறும் - காட்சி மாறும் - ‘நீட்' ஜீரோ ஆகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

நேற்று (23.9.2023) தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலை பல்கலைக் கழகம்) 31 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  செய்தியாளர்களுக் குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

அக்டோபர் 6 இல் முதலமைச்சருக்குப் பாராட்டு விழா!

செய்தியாளர்: தஞ்சையில் அக்டோபர் 6ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்து கிறீர்களே, அதுபற்றி சொல்லுங்களேன்?

தமிழர் தலைவர்: வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில், முத்தமிழறிஞர் கலை ஞர் அவர்களுடைய நூற்றாண்டு விழா வினை நடத்தவிருக்கின்றோம். தஞ்சை திலகர் திடலில் மாலையில் மிகப் பெரிய அளவில், பிரமாண்டமான பொதுக் கூட்டம் மற்றும் கருத்தரங்கம், பாராட்டு விழா நடை பெறவிருக்கிறது.

கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற விருக்கிறது.

காரணம், அதே இடத்தில்தான், முதன் முதலாக கலைஞர் அவர்கள் முதலமைச் சராக இருந்தபொழுது, அனைத்து ஜாதியின ரும் அர்ச்சகராவதற்கு வேண்டிய குழுவை நியமித்து - ஏற்பாடுகளைத் தொடங்கினார்.

அர்ச்சகர் பணிக்கு மகளிரை நியமித்து - பழைமைவாதத்தினுடைய முதுகெலும்பை முறித்திருக்கிறார்

அன்றைக்கு கலைஞர் அவர்கள் தொடங் கியதை, இன்றைய முதலமைச்சர் முடித்து வைத்திருக்கிறார். தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை இன்றைய முதலமைச்சர் அகற்றினார். அகற்றியதோடு மட்டுமல்ல, தந்தை பெரியாருடைய பெரு விருப்பமும் நிறைவேறி, கழகத்தவர்கள் - போராளிகள் ஒரு 50 ஆண்டுகாலம் போராடிய பிரச்சினைக்குத் தீர்வும் கண்டு - மகளிர் அர்ச்சகர்களாக ஆகக்கூடிய அளவிற்கு இன்றைக்கு அர்ச்சகர் பணிக்கு மகளிரை நியமித்தும் - பழைமைவாதத்தினுடைய முது கெலும்பை முறித்திருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல், தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி, எந்தெந்த முறையில் எல்லாம் ஜாதி ஒழிப்பு, பெண் ணடிமை ஒழிப்பு, பெண்களுக்கு சமத்துவம், பெண்களுக்கு அதிகாரத்துவம் வரவேண்டும் என்று நினைத்தார்களோ, அதையெல்லாம் 'திராவிட மாடல்' ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளமாகத் தான் ஒவ் வொரு நாளும் அற்புதமான சிறப்பான வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

தந்தை பெரியாரின் தத்துவப்படி செயல்படுகிறார் நம்முடைய முதலமைச்சர்!

அண்மையில் நம்முடைய முதலமைச்சர் தந்த மிகப்பெரிய பரிசு ''கலைஞர் மகளிர் உரிமைத் தொகை'' - அந்தத் தொகையைவிட, ''உரிமைத் தொகை'' என்று அந்தத் திட்டத்திற்குத் தலைப்பிட்டதுதான் - பெண்களுக்குச் சுயமரியாதை உண்டு - பெண்களுடைய உழைப்பை நாங்கள் அங்கீகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களை சுயமரியாதை உள்ளவர்களாக இந்த அரசு பார்க் கிறது. அவர்களுக்கு நாங்கள் 'இனாமாகவோ, சலுகையாகவோ'' வழங்கவில்லை - அந்தத் தொகை அவர்களுடைய உரிமை. காரணம் என்னவென்றால், காலமெல்லாம் உழைத்துக் கொண்டிருப்பவர்கள் மகளிர் என்று தந்தை பெரியார் அவர்கள் - ஆணுக்குப் பெண் சமம் என்று சொன்னாரே - அந்தத் தத்துவப்படி செயல்படுகிறார் நம்முடைய முதலமைச்சர்.

இப்படி பல சாதனைகளையும் செய்தமைக்காக நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்குப் பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

அவ்விழாவில், பல துறைகளில் இருக்கக் கூடிய வர்கள், ஆட்சித் துறையில் இருந்து அனுபவம் பெற்றவர்கள், பொதுத் துறையில் இருக்கின்றவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

பல்துறை அறிஞர்கள் பங்கேற்கிறார்கள்!

குறிப்பாக உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியும், இம்மண்ணைச் சார்ந்தவருமான ஜஸ்டிஸ் அக்பர் அலி அவர்கள். அதுபோலவே, மேற்கு வங்காளத்தில் தலைமைச் செயலாளராக இருந்து, இன்றைக்குப் பொதுப் பிரச்சினையில் சிறப்பான வகையில் கருத்துகளைக் கூறக்கூடிய பாலச்சந்திரன் அய்.ஏ.எஸ். அவர்கள், அதுபோலவே, ஜாதி ஒழிப்ப தற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய வைகுந்தர் அவர்களுடைய தத்துவத்தை இன்றைக்கு எடுத் துச் சொல்லக்கூடிய பாலபிரஜாபதி அடிகளார் அவர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

கலைநிகழ்ச்சி - கருத்தரங்கம்!

நம்முடைய 'திராவிட மாடல்' ஆட்சியின் சாதனை எப்படிப்பட்ட சாதனை என்பதை விளக்கக்கூடிய, ஒரு சிறு நாடகத்தின் மூலமாக 15 மணித்துளிகளில் கலை நிகழ்ச்சியாக நடைபெறவிருக்கிறது. ஒன்றரை மணிநேரத்திற்குள் இந்நிகழ்ச்சிகள் முடிவடையும்.

அன்று காலையில், பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது. கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு விழாவில் - கலைஞர் அவர்களு டைய சாதனைகள்; கலைஞருடைய பன்முக ஆற் றல்கள்பற்றியெல்லாம் அக்கருத்தரங்கத்தில் அறிஞர் பெருமக்கள் கருத்துரையாற்றவிருக்கிறார்கள்!

கருத்தரங்கில், ஆ.இராசா, பேராசிரியர் சுப.வீர பாண்டியன், வழக்குரைஞர் அருள்மொழி, பேரா சிரியர் கருணானந்தம் போன்றோர் அக்கருத் தரங் கத்தில் பங்கேற்றவிருக்கின்றனர்.

பல்வேறு கல்லூரிகளிலிருந்தும், பல்கலைக் கழகங் களிலிருந்தும் பேராசிரியர்கள் ஆய்வுக் கட்டுரை களைப் படிக்கிறார்கள்.

எனவே, அந்நிகழ்ச்சி காலையில் தொடங்கி, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) வளாகத்திலேயே சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

இதுவரை தஞ்சை காணாத அளவிற்கு....

ஆகவே, அந்த விழா என்பது இதுவரை தஞ்சை காணாத அளவிற்கு சிறப்பாகவும் இருக்கும்; எளிமை யாகவும் இருக்கும் - கருத்தாழம் உள்ளதாகவும் அமையும்.

நல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கிறது!

செய்தியாளர்: ஸநாதனம் குறித்துப் பேசிய அமைச் சர் உதயநிதிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பியிருக்கிறதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: நல்ல வாய்ப்பாகப் பார்க்கி றோம். ஏனென்றால், இதுவரையில் ஸநாதனம் என்றால், என்னவென்று  குழப்பிக் கொண்டிருந்தார்கள்.

எங்கே சொல்லவேண்டுமோ,

எதை சொல்லவேண்டுமோ,

எப்படி சொல்லவேண்டுமோ,

அப்படி சொல்வதற்கு நல்ல வாய்ப்புக் கிடைத் திருக்கிறது என்று எங்களைப் போன்றவர்கள் கருது கின்றோம்.

முதலில் வேதனை - இரண்டாவது சாதனை!

செய்தியாளர்: ஸநாதனப் பிரச்சினை வருகின்ற பொழுது, தமிழ்நாடு அரசின் சாதனைகள் பின்னுக்குத் தள்ளப்படுகிறதே?

தமிழர் தலைவர்: அவர்களுடைய நோக்கமே அதுதான். தமிழ்நாடு அரசின் சாதனைகள் என்பது பிறகு - ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசின் ஊழல்கள் வெளியே வரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த திசைத் திருப்பல். அதில் நாங்கள் கவனமாக இருக் கின்றோம்.

மோடி அரசின் ஊழல்பற்றியும், வேதனைகளைப் பற்றியும் சொல்லிவிட்டுத்தான் - பிறகு ‘திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைகளைச் சொல்லவிருக்கின்றோம்.

முதலில் வேதனை - இரண்டாவது சாதனைபற்றி மக்களுக்குச் சொல்லவிருக்கின்றோம்.

நீட் தேர்வினால் ஒரு பயனும் இல்லை என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிட்டது!

செய்தியாளர்: ‘நீட்' தேர்வில் ஜீரோ மதிப்பெண் பெற்றாலும் மருத்துவ மேற்படிப்பில் சேரலாம் என்று ஒன்றிய அரசு சொல்லியிருக்கிறதே?

தமிழர் தலைவர்: ‘நீட்' ஜீரோ ஆகப் போவதற்கு அடையாளம் அதுதான். அவர்களே ஜீரோ ஆக்கி விட்டார்களே, நாங்கள் ஆக்கவில்லை.

நீட் தேர்வு எந்த வகையிலும், அதனுடைய நோக் கத்தை நிறைவேற்றவில்லை என்பதை ஒப்புதல் வாக்குமூலம் தந்து - மோடி அரசே ஒப்புக்கொண்டது என்பதற்கு அடையாளமே அது.

நீட் தேர்வு நடத்தியும் ஒரு பயனும் இல்லை என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. அதற்குப் பிறகும் ஏன் நீட் தேர்வினை நடத்துகிறார்கள்?

இரண்டே காரணங்கள்தான் அதற்கு - 

ஒன்று, தனியார் கல்லூரிகள், வசதியான வாய்ப்பு களை அதன்மூலம் அடையவேண்டும்.

அதைவிட ஏற்கெனவே போட்ட ஒப்பந்தம் - அதன்படி கார்ப்பரேட் முதலாளிகளின் கோச்சிங் சென்டர்மூலம் பல லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது.

எனவே, கார்ப்பரேட் கொள்ளைகளுக்கும், கன தனவான்கள் கொள்ளையடிப்பதற்கும், ஏழைகள் தலையைத் தடவி மொட்டையடிப்பதற்கும் நீட் இருக் கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

‘தகுதி திறமை' என்பது நீட் தேர்வின்மூலம் இல்லை என்பது பூஜ்ஜியம் மதிப்பெண்மூலம் தெரிந்து விட்டது.

ஆறு மாதத்தில் ஒன்றியத்தில் ஆட்சி மாறும் - காட்சி மாறும் - நீட் ஜீரோ ஆகும்!

ஊழலை ஒழிப்பதற்காகத்தான் நீட்டைக் கொண்டு வந்திருக்கின்றோம் என்றனர் - ஆனால், ஓராண்டுகூட அந்தத் தேர்வு ஊழல் இல்லாமல் நடைபெறவில்லை.

ஆள்மாறாட்ட வழக்குகள் நிறைய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

ஆகவேதான், இதற்கு நிரந்தரத் தீர்வு வேண்டு மானால், இன்னும் ஒரு ஆறு மாதத்தில் ஒன்றியத்தில் ஆட்சி மாறும் - காட்சி மாறும் - நீட் 'ஜீரோ' ஆகும்!

மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு வந்தது - ஆனால், கிடைக்காது!

செய்தியாளர்: ஒன்றிய அரசு மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந் திருக்கிறதே, அதுபற்றி உங்கள் கருத்து?

தமிழர் தலைவர்: ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கின்ற மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா என்பது கானல் நீர் வேட்டை.

''வரும், ஆனால் வராது'' என்று ஒரு திரைப் படத்தில் வசனம் கேள்விப்பட்டிருப்பீர்கள்; அது போல, மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு வந்தது - ஆனால், கிடைக்காது. நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.


No comments:

Post a Comment