பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு உயர் கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு : அமைச்சர் க.பொன்முடி பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 22, 2023

பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு உயர் கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு : அமைச்சர் க.பொன்முடி பேட்டி

சென்னை, செப்.22 இரு நாடுகளுக்கும் இடையே கல்வி உறவை அதிகரிக்க பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு உயர் கல்வித் துறை புரிந்துணர்வு ஒப்பந் தம் மேற்கொண் டுள்ளது. இது வேலை வாய்ப்புகளை அதிகரிக்க உதவும் என அமைச்சர் க.பொன்முடி தெரிவித் தார்.

இங்கிலாந்து மற்றும் தமிழ்நாடு உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே மாணவர்கள், ஆசிரியர்களைப் பரி மாறிக் கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத் தாகியுள்ளது. பிரிட்டிஷ் கவுன்சில் சார்பாக உயர் கல்வி குறித்த சிறப்புக் கருத் தரங்கம் சென் னையில் நடத்தப்பட உள்ளது. இதில் பிரிட் டன் உயர் கல்வி நிறு வனங்களின் பிரதிநிதிகள், தமிழ்நாட்டுப் பல் கலை.களின் துணை வேந்தர்கள் பங் கேற்று கலந்துரையாட உள்ள னர். இதற்கான தொடக்க விழா சென் னையில் உள்ள அதன் மய்யத்தில்  20.9.2023 அன்று நடை பெற்றது. 

இந்நிகழ்வில் உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய் யாமொழி, உயர்கல்வித் துறை செயலர் ஏ.கார்த்திக், பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா, பிரிட்டிஷ் கவுன்சிலின் தென்னிந்தியா இயக்குநர் ஜனக புஷ்பநாதன் உட் பட பலர் கலந்துகொண் டனர்.

இந்தக் கருத்தரங்கில் இரு நாடுகளின் உயர் கல்வி நிறுவனங்களுக்கு இடையே மாணவர்கள், ஆசிரியர்களைப் பரி மாற்றம் செய்து கொள்வ தற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி யுள்ளது. அதற்கான ஒப்பந்தத்தில் உயர்கல்வித் துறை செயலர் கார்த்திக் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலின் தென்னிந்தியா இயக்குநர் ஜனகபுஷ்பநாதன் ஆகியோர் கையெழுத் திட்டனர். 

இந்த ஒப்பந்தம் மூலம் 2 நாடு களுக்கும் இடையே கல்வி வளர்ச் சிக்கான பணிகளை முன்னெடுத்தல் உள் ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழ்நாடு  அரசின் ‘நான் முதல் வன்’ திட்டத்தின் கீழ் இந்த முயற்சிகள் முன் னெடுக் கப்பட்டுள்ளது. 

கல்வியறிவு மேம் படுத்தப்படும்: இது குறித்து செய்தியாளர் களிடம் அமைச்சர் க.பொன்முடி கூறும் போது, “இரு நாடுகளுக்கு இடையே கல்வி சார்ந்த உறவுகளை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் உதவிகர மாக இருக்கும். அண்ணா பல்கலைக் கழகம்,  கோயம்புத்தூர் பாரதி யார் பல் கலைக்கழகம் பிரிட்டன் உயர் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. அதேபோல், மற்ற பல் கலைக்கழகங்களும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண் டும். இதன் மூலம் மாணவர் களின் கல்வி யறிவு மேம்படுத்தப் படும். மேலும், பன்னாட்டு கல்வி வளர்ச்சியைப் பெற்று வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் இந்த செயல்பாடு வழிவகுக்கும்'’ என்றார்.


No comments:

Post a Comment