துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை பணிகள்: அடுத்த மாதம் தொடங்கும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 11, 2023

துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை பணிகள்: அடுத்த மாதம் தொடங்கும்

சென்னை, செப்.11-  சென்னை துறைமுகம் முதல் மதுர வாயல் வரை உயர்மட்ட பறக்கும் சாலை  அமைக்கும் திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோ கன் சிங், முதல மைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரால் தொடங்கி வைக்கப் பட்டது.

கனரக வாகனங்கள் இந்த சாலையை  பயன்படுத்தி விரை வாக துறைமுகத்திற்கு சென்று வர இந்த திட்டம் தொடங்கப் பட்டது. இதன்மூலம் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று கருதப்பட்டது.

இந்நிலையில் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பதால் சுற்றுச்சூழல் பிரச்சினை ஏற்படும் எனக்கூறி ஜெயலலிதா இந்த திட்டத்தை முடக்கினார். பின்னர் 10 ஆண்டுகளாக பணிகள் நடை பெறாமல் இருந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததை அடுத்து அந்த திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது.

இதையடுத்து உயர்மட்ட சாலை அமைக்க தமிழ்நாடு அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றுக் கிடையே ஒப்பந்தம் கையெழுத் தானது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒப்பந்தம் விடுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால்  பணிகள் மீண்டும் மீண் டும் ஒத்திவைக்கப்பட்டதால் தாம தமானது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்  ஒப்பந்தம் கோரப் பட்டது. இத்திட்டம் முதலில் ரூ.3,204 கோடியில் செயல்படுத்த  முன்மொழியப்பட்டது. ஆனால் உயர்த்தப்பட்ட மேம்பாலம் இரண்டு நிலைகளை (டபுள் டெக்கர்) மறுவடிவமைப்பு செய்யப்பட்டதால் பின்னர் ரூ.5,721.33 கோடியாக மாற்றப் பட்டது.  

மேம்பால பணிகள் 4 பகுதிக ளாக பிரித்து செயல்படுத்தப் படுகிறது. மேம்பாலத்தின் மொத்த நீளம் 20.565 கி.மீ. ஆகும். இந்த சாலைக்கு சுற்றுச்சூழல், ரயில்வே துறை, கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றிடம் இருந்து அனுமதி பெறப்பட் டுள்ளது.

இந்நிலையில் சென்னை துறை முகம் முதல் மதுரவாயல் வரையிலான உயர் மட்ட வழித்தடத்தின் ஒரு பகுதி இரட்டை தளம் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கப் படும் என்று ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.  

தமிழ்நாட்டில் அரசு மேற் கொண்டுள்ள திட்டங்களை ஆய்வு செய்த ஒன்றிய மந்திரி  கட்கரி, அனைத்து நெடுஞ்சாலைப் பணிகளும்  சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், நிலம் கையகப் படுத்தும் பணிகள் நிறைவடைந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment