தெருவோரக் கடை நடத்துபவரின் மகன் நீதிபதி ஆனார் வாழ்த்துகள் குவிந்தன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 14, 2023

தெருவோரக் கடை நடத்துபவரின் மகன் நீதிபதி ஆனார் வாழ்த்துகள் குவிந்தன

லக்னோ, செப். 14 -  உத்தரப் பிர தேசத்தில் வசித்து வருபவர் முகமது காசிம். இவரது தந்தை உத்தரப் பிரதேசத்தின் வடமேற்கே சம்பல் பகுதியில் தெருவோரத்தில் கடை போட்டு உணவுப் பொருட் களை விற்பனை செய்து வருகிறார். 

இந்த நிலையில், நீதிபதிகளுக் கான சிவில் சர்வீஸ் தேர்வில் கலந்து கொண்ட காசிம், அதில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 135ஆ-வது ரேங்க் பெற்று நீதிபதியாகியுள்ளார்.

அவர் நீதிபதியானதற்காக அவ ருடைய நண்பர்கள் பலர் எக்ஸ் சமூக ஊடகத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களில், நீதி துறையில் முன்பே பதவியில் உள்ள சிலர், காசிமை வரவேற்கும் வகையில் சமூக ஊடக பதிவை வெளியிட்டு உள்ளனர்.

இதுபற்றி வழக்குரைஞராக உள்ள ரப்பானி என்பவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், முகமது காசிம் பாய்க்கு வாழ்த்துகள். எனக்கு மூத்தவர், வழிகாட்டி மற்றும் ஒரு நண்பராக உள்ள காசிம் பாய், உத்தரப் பிரதேச சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாகி உள்ளார். 

உங்களுடைய கடின உழைப்பு பலன் அளித்துள்ளது. உங்களது சாதனைக்காக நான் உண்மையில் பெருமைப்படுகிறேன்.

உங்களுடைய புதிய பதவியில் அனைத்து நலன்களும் கிடைக்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டு உள்ளார்.

காசிம், அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தில் சேர்ந்து இள நிலை சட்ட படிப்பும், பின்னர் டில்லி பல்கலைக் கழகத்தில் முது நிலை சட்ட படிப்பும் படித்துள்ளார்.

No comments:

Post a Comment