புலவர் இரா.வேட்ராயன்! படத்தைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் புகழாரம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 28, 2023

புலவர் இரா.வேட்ராயன்! படத்தைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் புகழாரம்!


பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் வீழவில்லை, 
வாழ்ந்து காட்டியவர்கள் என்பதற்கு அடையாளம் புலவர் இரா.வேட்ராயன்!
படத்தைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் புகழாரம்!

தருமபுரி, செப்.28 - தருமபுரி மாவட்ட  கழக மேனாள்  தலைவரும் இந்நாள் பொதுக்குழு உறுப்பினருமான பாப்பாரப்பட்டி பெரியார் பெருந்தொண்டர் புலவர் இரா.வேட்ராயன்   கடந்த 17. 9.2023 ஆம் தேதி மறைவுற்றார். 

அவருடைய படத்திறப்பு நிகழ்வு 27.9.2023 அன்று நடைபெற்றது. 

குடும்பத்தினருக்கு ஆறுதல்

படத்திறப்பு நிகழ்விற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாப்பாரப்பட்டி திரு.வி.க.நகர் ஆசிரியர் குடியிருப்புப் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று புலவர் இரா.வேட்ராயனின் வாழ்விணையர் ஆசிரியர் சகுந்தலா, மகள்கள் மருத்துவர் கனிமொழி, மருத்துவர் மலர்விழி, மருத்துவர் கவியரசி, அவரது மருமகன்கள் பொறியாளர் கண்ணன், மருத்துவர் கிருபாகரன், மருத்துவர் கோவிந்தன் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி வீட்டில் வைக்கப்பட்டிருந்த புலவர் வேட்ராயன்  படத்திற்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அதைத்தொடர்ந்து படத்திறப்பு நிகழ்வு  பாப்பாரப்பட்டி பி. கே. எஸ். மண்டபத்தில் காலை 9 மணியளவில் நடைபெற்றது. மாவட்ட  கழக தலைவர்   கு. சரவணன்  தலைமையில், ஆசிரியர் சகுந்தலா வேட்டராயன், மாநில  மகளிரணி செயலாளர் தகடூர்  தமிழ்ச்செல்வி, மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா. செல்லதுரை, கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்டத் துணைத் தலைவர் இ.மாதன், பொதுக்குழு உறுப்பினர் தீர்த்தகிரி, க.கதிர், பகுத்தறிவு ஆசிரியரணி  அமைப்பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்  கதிர். செந்தில், அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா. இராஜேந்திரன், வீ.சிவாஜி, மு. பரமசிவம், பீம.தமிழ் பிரபாகரன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் காசு என்னராஜ், செயலாளர் சுதாமணி,  நகரத் தலைவர் வினோபாஜி,  நகர செயலாளர் சுந்தரம், நகர துணைத் தலைவர் நரசிம்மன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

மாவட்ட  கழக செயலாளர் பெ. கோவிந்தராஜ் வரவேற்புரையாற்றினர். தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் ஒருங்கி ணைத்து இணைப்புரை  வழங்கினார். 

முன்னதாக திமுக மேற்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ. சுப்பிரமணி, திமுக விவசாய தொழிலாளர் அணி மாநில துணைத்தலைவர் பி.என்.பி. இன்பசேகரன், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் மருத்துவர் இரா.செந்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வே.விஸ்வநாதன் ஆகியோர் மறைந்த புலவர் இரா.வேட்டராயன்  இயக்கப் பணியை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டினர். 

படத்திறப்பு

பெரியார் பெருந்தொண்டர் புலவர் வேட்ராயன் படத்தை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து பேசும்போது குறிப்பிட்டதாவது,

பெரியார் பெருந்தொண்டர் புலவர் வேட் ராயன்  இயக்கம் என்ன சொல்லுகிறதோ அதிலிருந்து சிறிதளவும் பிறழாமல் கட்டுப் பாட்டை மீறாத ஒப்புமையற்ற பெரியார் பெருந் தொண்டராக வாழ்ந்து காட்டியவர். அவரின் இழப்பு என்பது பேரிழப்பாகும். அவரின் குடும் பத்திற்கு மட்டுமல்ல, கொள்கை குடும்பத்திற்கும் பேரிழப்பாகும். அந்தக் கொள்கை குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்துள்ளேன். இயற்கை என்னும் கோணல் புத்தி அவரை பறித்துக் கொண்டது. அந்த இழப்பை பகுத்தறிவாளர்கள் ஆகிய நாம் ஏற்றுக் கொள்ளவேண்டியதாக உள்ளது.

திராவிடர் கழகத் தொண்டர்கள் என்றாலே கொள்கையை  தொண்டறமாகக் கொண்ட வர்கள். பெரியார் பெருந்தொண்டர்களாகிய நம்மை கொள்கையை சொல்லி அடை யாளப்படுத்துகின்ற இயக்கமாக நம்  இயக்கம் இருக்கிறது. புலவர் வேட்ராயன் இயக்கத் திற்காகவே தன்னை ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றியவர். அவர் குடும்பத்தினரை நல்ல நிலைக்கு ஆளாக்கி உள்ளார். பெண் பிள்ளை களைப் படிக்க வைத்து மருத்துவர்களாக உருவாக்கியுள்ளார். அனைவரும் மருத்துவராக உள்ளனர் பெரியார் இயக்கம் என்ன செய்தது என்று கேட்பவர்களுக்கு எடுத்துக்காட்டாகும்.

பெரியார் இயக்கம் என்ன செய்தது, பெரியார் என்ன செய்தார் என்று கேட்பவர்களுக்கு எடுத்துக்காட்டு குடும்பத்தில் மூன்று பேரும் மருத்துவர்கள். எப்படி நஞ்சையா குடும்பத்தில், ஊமை. ஜெயராமன் குடும்பத்தில் மருத்துவர் களாக உள்ளதைப் போல் புலவர்  வேட்ராயன்  குடும்பமே மருத்துவர் குடும்பமாக உள்ளது. லண்டனில் மருத்துவராக பணியாற்றும் அள விற்கு வளர்ந்துள்ளனர். காரணம் பெரியார்.                                        இயக்கத்தில் போராட்டம், கிளர்ச்சி என்றால் முன்னிலையில் நிற்பவர் புலவர் வேட்ராயன். அப்படிப்பட்ட சுயமரியாதை இயக்கத் தோழரை  இழப்பது குடும்பத்திற்கு மட்டும் இழப்பல்ல, இயக்கத்திற்கும் சமூகத்திற்கும் இழப்பாகும். கொள்கை ரீதியாக அவருக்கு இறுதி மரியாதை செய்துள்ளார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன்.  

அவர் இருந்த காலத்தில் குடும்பத்தினர் எப்படி இருந்தார்களோ அதே போல இனியும் இயக்க தொடர்புடன்  இருக்க வேண்டும். குடும்பத்திற்கு ஒன்று என்றால் நாங்கள் துணை நிற்போம். நாம் அனைவரும் நம் குடும்பத்தில் பெண்களைப் பெருமைப்படுத்த வேண்டும். புலவர் வேட்ராயன்  தன் பிள்ளைகளுக்கு தமிழில் கனிமொழி, மலர்விழி, கவியரசு, என்று பெயரிட்டுள்ளார்- சிறப்புக்குரியது. தமிழில் பெயரிடுவது ஒரு கட்சிக்கு உரியது அல்ல, ஆனால், அதுதான் நமக்கு அடையாளம். புலவர் வேட்ராயன்  நமக்கு படம் மட்டுமல்ல, பாடமாகவும் திகழ்கிறார். சுயமரியாதை வாழ்வே! வாழ்வே சுகவாழ்வு! என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும். தோழர்களின் கவனத்திற்கு ஒன்றைச் சொல்லுகிறேன். இருசக்கர வாகனத்தின்  பயணத்தை குறியுங்கள், அதிக தூரம் இருசக்கர வாகனத்தில் பயணிக் காதீர்கள், எப்படி காரில் செல்லும்போது சீட் பெல்ட் போட்டு செல்கிறோமோ அதேபோல இருசக்கர வாகனத்தில் செல்லும்போது  ஹெல் மெட் போட்டு செல்லுங்கள்.  அது காவல் துறைக்காக அல்ல நமது உயிர் பாதுகாப்புக்காக என்பதை உணருங்கள். முடிந்த அளவு பயணத்தை பேருந்தில் அல்லது காரில் பயணம் செய்ய முன் வாருங்கள் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.  

பங்கேற்றோர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் மின்னல் சக்தி, தொழிலதிபர்  சுதா கிருஷ்ணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கே. ஆர். குமார்,  கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் அரி வரசன், மாவட்ட செயலாளர் மாணிக்கம், ஓசூர் மாவட்ட தலைவர் வனவேந்தன், அரூர் மாவட்ட செயலாளர் பூபதிராஜா, திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன், மாவட்ட செயலாளர் கலை வாணன்,  மாநில மாணவர் கழக துணை செயலாளர் எழில் சிற்றரசு, அரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் த.யாழ்  திலீபன், அரூர் மாவட்ட மாணவர் கழக தலைவர் இ.சமரசம் தருமபுரி நகரத் தலைவர் கரு பாலன், கடத்தூர் ஒன்றிய செயலாளர் தனசேகரன், பகுத்தறிவாளர் முல்லை மதிவாணன், கடமடை சங்கரன், அழகேசன், பசி காமராஜ், வாசகர் வட்ட செயலாளர் சுதாமணி, காமலாபுரம் தோழர்கள் இராஜா,சிசுபாலன், சின்னசாமி, மாணிக்கம், முத்து, உள்ளிட்ட  தோழர்கள் கலந்து கொண் டனர். இறுதியாக மாவட்ட   கழக அமைப்பாளர் சி காமராஜ் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment