அறிவியல் செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 14, 2023

அறிவியல் செய்திகள்

* ஜப்பானைச் சேர்ந்த டோஹோகு பல்கலை., 7,097 குழந்தைகளை வைத்து ஓர் ஆய்வை நடத்தியது. ஒரு வயதில் அதிக நேரம் போன், கணினி, டிவி உள்ளிட்ட டிஜிட்டல் திரைகளைப் பார்க்கும் குழந்தைகளுக்கு 4 வயதாகும் போது அவர்களின் பேச்சாற்றல், பிரச்சினையைத் தீர்த்தல், சமூகத்துடன் பழகுதல் ஆகிய திறன்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

* மனிதர்கள் பயன்படுத்தும் 95 சதவீத கைக்கடிகாரங்கள் பாக்டீரியாவின் வாழ்விடங் களாக உள்ளதாக அமெரிக்காவின் ப்ளோரிடா அட்லான்டிக் பல்கலை. மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. வெவ்வேறு பொருட்களாலான கைக்கடிகாரங்களை ஆய்வு செய்ததில், இருப்ப திலேயே அதிகமான பாக்டீரியா, துணியாலான கைக்கடிகாரத்தில் இருந்தது. அதைத் தொடர்ந்து முறையே ப்ளாஸ்டிக், ரப்பர், தோல், வெள்ளி ஆகியவற்றால் ஆன கைக்கடிகாரங்களில் அதிக பாக்டீரியா இருந்தது. இருப்பதிலேயே குறைந்த பாக்டீரியா, தங்கத்தாலான கைக்கடிகாரங்களில் இருந்தன.

* ஆப்பிரிக்காவில் வாழும் முடியிலித் துன்னெலியில் 'நேக்கட் மோல்' எலிகள் காணப் படும் 'ஹையாலுரோனான் சிந்தேஸ் 2' எனும் மரபணு, அவற்றுக்கு வயதாவதால் வரும் நோய் களைத் தடுப்பதோடு, ஆயுளையும் அதிகரிக்கிறது என்று அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலை. ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இம்மரபணுக் களை எலிகள் உடலில் உற்பத்தி செய்ய வைத்து அவற்றின் ஆயுள் கூடுவதையும் நிறுவியுள்ளனர். மனிதர்களில் இந்த மரபணுவைப் பயன்படுத்தினால் ஆயுளை 3.5 ஆண்டுகள் அதிகரிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

* பெல்ஜியம் நாட்டின் ஆன்ட்வெர்ப் பல்கலை. ஆய்வாளர்கள், 39 நிறுவனங்கள் தயாரித்த, பழச்சாறு குடிக்கப் பயன்படும் காகிதம், கண்ணாடி, மூங்கில், பிளாஸ்டிக், இரும்பு ஸ்ட்ராக்களை ஆய்வு செய்தனர். அவற்றில் இரும்பு தவிர்த்து மற்ற அனைத்து ஸ்ட்ராக்களிலும் உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தும் 'பாலி அண்டு பெர்ஃப்ளூரோ அல்கேல்' வேதிப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளன. 

No comments:

Post a Comment