ஒன்றிய பாஜக அரசில் சாதனைகள் ஏதுமில்லை! ஊழல் முறைகேடுகளை மறைக்கவே ஸநாதனத்தை தூக்கிப் பிடிக்கும் பா.ஜ.க.வின் ரகசியம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 13, 2023

ஒன்றிய பாஜக அரசில் சாதனைகள் ஏதுமில்லை! ஊழல் முறைகேடுகளை மறைக்கவே ஸநாதனத்தை தூக்கிப் பிடிக்கும் பா.ஜ.க.வின் ரகசியம்!

சென்னை,செப்.13- சென்னை பெரியார் திடலில் நேற்று (12.9.2023) மாலை ஸனா தனத்தை பி.ஜே.பி. தூக்கிப்பிடிக்கும் ரகசியம் என்ன? சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை நிறைவுரையாற்றுகையில், ஒன்பது ஆண்டு கால ஒன்றிய பாஜக அரசில் சாதனைகள் ஏதுமில்லை. ஊழல் முறைகேடுகளை மறைக் கவே ஸநாதனத்தின் பெயரால் திசை திருப் புகிறார்கள். எதை மறைக்ககிறார்களோ, அதை மக்களிடம் பேசுவோம். ஊழல் ஆட்சி, மதவெறி ஆட்சி, எதேச்சதிகார ஆட்சிகுறித்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண் டும். உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன. யாரைத் தேர்வு செய்வது என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். ஸனாதனத்தைக் காட்டி திசைதிருப்பாதீர்கள் என்று ஆசிரியர் அவர்கள் சிறப்புரையில் எச்சரித்தார்.

சிறப்புக்கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி அனைவரையும் வரவேற்று இணைப்புரை வழங்கினார்.

சிறப்புக்கூட்டத்தில் தொடக்க நிகழ்வாக பெரியார் சுயமரியாதை ஊடகப்பிரிவு சார்பாக ஸனாதனத்தைத் தோலுரிக்கும் ஓரங்க நாடகம், கலை நிகழ்ச்சி நடைபெற்றது. துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,  உடுமலை வடிவேல், வை.கலையரசன், மு.பவானி, செ.பெ.தொண் டறம் குழுவினர் மிகக் குறைந்த கால அவ காசத்தில் வெகு நேர்த்தியாக நிகழ்ச்சியை அமைத்து நடத்தி அனைவரின் பாராட்டை யும் பெற்றனர்.

கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் தலைமையுரையில் திராவிடர் கழக செயற்குழுக்கூட்டத்தின் தீர்மானங்களை வாசித்தார், பார்வையாளர்களின் கரவொலி மூலம் வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து அவர் ஆற்றிய தலைமையுரையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நலத் திட்டங்கள்குறித்து பேசாமல், மக்களிடையே மண்டியிருக்கும் பக்தியைப் பயன்படுத்து கிறார்கள் இதுதான் ஸனாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப்பிடிக்கும் ரகசியம் என்று குறிப்பிட்டு பல்வேறு வரலாற்றுத்தகவல்களை எடுத்துக் காட்டி ஆர்.எஸ்.எஸ்., பிஜேபியை அம்பலப் படுத்தினார்.

நூல் வெளியீடு

சிறப்புக் கூட்டத்தில் ஸநாதனத்தை விவரிக்கும் புத்தகங்கள் வெளியிடப்பட்டு சிறப்புத் தள்ளுபடியில் அளிக்கப்பட்டன.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மஞ்சை வசந்தன் தொகுத்தளித்த சனாதனம் தகர்த்து சமதர்மம் காத்த வள்ளலார், மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி (தந்தை பெரியார்), தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய இந்து மதத்தைப் பற்றி ஏன் பேசுகிறோம்?, கவிஞர் கலி. பூங்குன்றன் எழுதிய பொசுங் கட்டும் மனுதர்மம்!, நாவலர் இரா. நெடுஞ்செழியன் எழுதிய திருக்குறளும் மனுதர்ம மும், அ.இறையன் எழுதிய இல்லாத ஹிந்து மதம், புரிந்து கொள்வீர் புராணங்களை- வேதங்களை, கு. வெ.கி. ஆசான் எழுதிய வருண ஜாதி உருவாக்கம் ஆகிய புத்தகங்கள் நன்கொடை மதிப்பு ரூ.250. சிறப்புக்கூட்டத்தில் ரூ. 50 சிறப்புத் தள்ளுபடியுடன் ரூ.200க்கு அளிக்கப்பட்டன.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களி டமிருந்து ஏராளமானவர்கள் வரிசையில் சென்று புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர்.

மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ்சோதி, தமிழக மூதறிஞர் குழு பொருளாளர் த.கு.திவாகரன், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பழ.சேரலாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், பகுத்தறிவாளர் கழகம் மு.ரா.மாணிக்கம், மாணவர் கழகம் செ.பெ.தொண்டறம், பசும்பொன், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், அயன்புரம் துரைராஜ், தாம்பரம் கருப்பையா, பல்லாவரம் நரேஷ்  உள்பட ஏராளமானவர்கள் புத்தகங் களை பெற்றுக்கொண்டனர்.

சிறப்புக்கூட்டத்தில் சிறப்புரையாக பொதுச்செயலாளர் முனைவர்  துரை.சந்திர சேகரன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர்  அ.அருள்மொழி உரையாற்றினார்கள்.

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார் . வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் நன்றி கூறினார்.

சிறப்புக்கூட்டத்தில் காங்கிரசு கட்சி சட்டமன்ற மேனாள் உறுப்பினர் உ.பலராமன், தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் செயலாளர் மா. செல்வராஜ்,  புலவர் பா.வீரமணி, துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குண சேகரன், கழகப் பேச் சாளர் அதிரடி க. அன்பழகன், தலைமைக்கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஈரோடு த.சண்முகம், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் செந்தூர்பாண்டியன், இளைஞரணி மாநில துணை செயலாளர் சோ.சுரேஷ், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, திருவொற்றியூர் மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன், அரியலூர் சிந்தனைசெல்வன்,  கோ.வீ.ராகவன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், கருப்பையா, மதுரவாயல் முரளி, பெரியார் மாணாக்கன், கூடுவாஞ்சேரி மா.ராசு, சேத்துப்பட்டு நாகராசன், நங்கைநல்லூர் க.தமிழினியன், வட சென்னை மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக் குழு உறுப்பினர் தி.செ.கணேசன், ஓட்டேரி பாசுகர். சி.வெற்றிசெல்வி, திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, பூவை செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment